19:39
0

பாலூட்டிகளில் உள்ள மிக முக்கியமான அங்கங்களுள் நுரையீரலும் ஒன்றாகும்.

இதன் பிரதான தொழிலாக சுவாசம் காணப்படுகின்றது.

எனினும் இது தவிர மற்றுமொரு தொழிலையும் பகுதியாக மேற்கொள்வது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது புதிய இரத்தத்தினை உருவாக்கும் தொழிலையும் மேற்கொள்கின்றது.

சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.

சுண்டெலியினை வைத்து மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் மனிதர்களிலும் நுரையீரல்கள் இரத்தத்தனை உற்பத்தி செய்யும் தொழிலை மேற்கொள்கின்றன என குறித்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இரத்தத்தில் காணப்படும் குருதிச் சிறுதட்டுக்கள் எலும்பு மச்சைகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன என முன்னர் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

எனினும் புதிய கண்டுபிடிப்பின்படி நுரையீரல்களும் குருதிச் சிறுதட்டுக்களை உற்பத்தி செய்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment