உலக நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் 42வது முக்கியமான நாடாகும். ஆப்கானிஸ்தான் என்றவுடன் நினைவில் வருவது தீவிரவாதம், பசுமையற்ற நிலங்கள், மசூதிகள் போன்றவை தான்.
இதை தவிர்த்து ஆப்கானிஸ்தானை பற்றி நமக்கு தெரியாத உண்மைகள் பலவும் உள்ளது.
ஆப்கானிஸ்தானில் பஷ்டூன், தாஜிக், ஹசாரா, உஸ்பெக், ஆமிக், அமிக், டர்க்மென்ஸ், பாலோக், பாபாய், நர்சிஸ்தானி, குஜார், அரபு, பிராஹீய், பாமினி உள்ளிட்ட மொத்தம் 14 வகையான இன மக்கள் உள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் தேசிய விளையாட்டு புஸ்காஷி என்னும் ஆடு பிடித்தலாகும். ஆபத்து நிறைந்த இந்த விளையாட்டானது ஆப்கானிஸ்தானின் வடக்கில் உள்ள பரந்த புல்வெளிகளில் நூற்றாண்டுகளாக விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டினை ஒலிம்பிக்-ல் விளையாட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானியர்கள் டிசம்பர் 31ம் திகதி இரவு புத்தாண்டினை கொண்டாடுவது இல்லை. மார்ச் 21ம் திகதி வசந்தகாலத்தின் முதல் நாளில் மக்கள் அனைவரும் மஜார்-இ-ஷெரிப் என்னும் இடத்தில் கூடி புத்தாண்டினை கொண்டாடுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் 2000 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற மிகப்பெரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது.
மிக வறட்சியான நாடான ஆப்கானிஸ்தானில் பனிப்பொழிவு என்பது மிக சாதாரணமானது. டிசம்பர் முதல் பிப்ரவரி வரையில் வடக்கு ஆப்கானிஸ்தானில் பனிப்பொழிவானது உண்டாகிறது.
ஆப்கானிஸ்தானின் சுதந்திர தினம் ஆகஸ்ட் 19-ம் திகதியாகும். கடந்த 2016ம் ஆண்டு தனது 97வது சுதந்திர தினத்தினை அந்நாடு கொண்டாடியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் போன்ற பெரும்பாலான விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக பெண்கள் எந்த விளையாட்டு போட்டிகளிலும் பங்கேற்க அனுமதியில்லை. ஆனால் 2015 ஆண்டில் ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் குழுவானது உலக கோப்பையினை கைபற்றியது.
அதே போன்று 2012 ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண் ஒருவர் ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்டது போன்றவை ஆப்கானிஸ்தான் விளையாட்டில் ஆர்வம் காட்டுவதை தெரிவிக்கின்றது.
ஆப்கானிஸ்தான் நாட்டின் பணமானது ஆப்கானி என குறிப்பிடப்படுகிறது. 2002 ஆண்டில் புதிய ரூபாய் நோட்டுக்களை அந்நாட்டு அரசானது அறிமுக செய்தது.
2006 ஆண்டில் புதிய தேசிய கீதத்தினை அந்நாட்டின் அரசானது வெளியிட்டுள்ளது. இதில் 14 விதமான இன மக்களின் பெயர்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான நகரங்களில் வியாழக்கிழமையன்று பழைய மற்றும் புதிய தேசிய கீதத்தினை வாசித்து இனிப்புகள் மற்றும் டீ யினை குடித்து கொண்டாடுவர்.
ஆப்கானிஸ்தானின் எல்லையானது ஈரான், பாகிஸ்தான், தாஜிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் சீனா ஆகிய ஆறு நாடுகளால் சூழப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment