மின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட்பட பொழுதுபோக்கு நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என ஜப்பான விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த யுகத்தில் எல்லாமே சாத்தியம் என்றாகி விட்டது.
இதை மேலும் உறுதிபடுத்தும் விதமாக ஜப்பான் விஞ்ஞானிகள் புது விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள்.
அது தான் மின்னணு தோல்!
இந்த மின்னணு தோல் உலகின் மிக மெல்லிய, நெகிழ்வான மின்கடத்தியாக கருதப்படுகிறது.
இதை இரண்டாவது தோலைப்போல உடலில் அணியலாம்.
இது மனித தோல் செல்லை விட பத்து மடங்கு மெல்லிசானது
இதை பயன்படுத்தி மனிதர்களை உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கலாம்.
தொலைக்காட்சி உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகள் வரை இந்த தோலில் காணலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
விரைவில் இது நடைமுறைக்கு வரும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.
0 comments:
Post a Comment