06:45
0

ஸ்மார்ட் கைப்பேசி பிரியர்கள் அனைவரினதும் கவனம் தற்போது ஆப்பிள் iPhone 8 மீது திரும்பியுள்ளது.

அதிலும் 3 வகையான iPhone 8 கைப்பேசிகள் அறிமுகமாவதனால் எதிர்பார்ப்பு மேலும பன்மடங்காகியுள்ளது.

இவற்றின் சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் ஏற்கணவே வெளியாகியிருந்தன.
இந்நிலையில் தற்போது குறித்த கைப்பேசிகளின் வடிவங்கள் எப்படியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பிற்கு விடை தரும் வகையில் சில புகைப்படங்கள் கசிந்துள்ளன.

எனினும் இப் புகைப்படங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டவை அல்ல.

இதேவேளை இவற்றின் வெளிப்பகுதிகள் துருப்பிடிக்காத உருக்கினால் ஆனதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் 4.7 அங்குல அளவு, 5.5 அங்குல அளவு, 5.8 அங்குல அளவினைக் கொண்ட திரைகளை உடைய கைப்பேசிகளையே ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment