19:22
0

சூரியக் குடும்பத்தில் செவ்வாய் கோள் போன்ற விண்பொருளை அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியக்குடும்பத்தில் இருக்கும் கோள்கள் பற்றி வெகுகாலமாகவே ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. இதுவரை சூரியக்குடும்பத்தில் 9 கோள்கள் இருப்பதாக கூறப்பட்டது.

பின்னர், புளூட்டோவுக்கு கோள்களுக்கான தகுதிகள் இல்லை என கூறி கோள்களின் பட்டியலில் இருந்து புளூட்டோ கடந்த 2006ல் நீக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது, செவ்வாய் கோள் போன்ற விண்பொருள் ஒன்று சூரியக்குடும்பத்தின் எல்லையில் இருப்பதை அரிசோனா பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த விண்பொருள் புளூட்டோவுக்கு மிக அருகில் இருப்பதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், அதன் காந்த விசையை பொருத்தே அது கோளா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், விஞ்ஞானிகளின் கருத்துப்படி செவ்வாய் கிரகத்தை விட இந்த கோள் பெரிதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

0 comments:

Post a Comment