22:32
0

பிலிப்பீன்சு, பிலிப்பினோ, பிலிப்பினாஸ் அல்லது பிலிப்பைன்ஸ் என்றழைக்கப்படும் பிலிப்பீனியக் குடியரசு நாடானது தென்கிழக்கு ஆசியாவில் மேற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும்.

லூசோன், விசயாஸ் மற்றும் மின்டனாவு என்று மூன்று பிரதான புவியியல் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ், 7,107 தீவுகளைக் கொண்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகள் எது?

பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகளாக வடக்கே லூசான் நீரிணைக்கு அப்பால் தாய்வானும், மேற்கே தென் சீனக் கடலுக்கு அப்பால் வியட்னாமும், தென்மேற்கே சுலு கடலுக்கு அப்பால் புரூணை தீவுகளும், தெற்கே இந்தோனேசியாவின் ஏனைய தீவுகளிலிருந்து பிலிப்பீன்சைப் பிரிக்கும் செலேபெஸ் கடலும், கிழக்கில் பிலிப்பீன் கடலும் பலாவு எனப்படும் ஒரு தீவு நாடும் பிலிப்பைன்ஸ் நாட்டின் எல்லைகளாக அமைந்துள்ளது.


பிலிப்பைன்ஸ் பெயர் ஏற்பட காரணம் என்ன?

எசுப்பானிய மன்னர் இரண்டாம் பிலிப்பின் நினைவாக பிலிப்பீன்சு என்ற பெயர் இத்தீவுக்கு சூட்டப்பட்டது.

எசுப்பானிய நாடு சுற்றும் பயணியான ருய் லோபேஸ் டி வில்லாபோஸ் தனது 1542-ஆம் ஆண்டு பயணத்தின் போது அன்றைய எசுப்பானிய முடிக்குரிய இளவரசரின் நினைவாக லெய்ட்டித் தீவு, சாமார்த் தீவு ஆகிய தீவுகளுக்கு பிலிப்பினாசு என்ற பெயரைச் சூட்டினார்.

அதன் பின் பாரிசு உடன்படிக்கை ஏற்பட்டதிலிருந்து பிலிப்பீன்சு என்ற பெயர் தோன்றி அந்நாட்டின் பொதுவான பெயராகவும் மாறி, இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் பிலிப்பீன்சு குடியரசு என்பது பெயராக கூறப்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் சிறப்புகள் என்ன?

பிலிப்பைன்ஸ் நாடு ஏராளமான இயற்கை வளங்களையும் உலகின் மிகப்பெரிய உயிரினங்களையும் கொண்டதால், உலகில் 72-ஆவது பெரிய நாடாக விளங்குவது இந்நாட்டின் சிறப்பாக உள்ளது.

ஆனால் இந்நாடு பசிபிக் நெருப்பு வளையப் பகுதியில் அமைந்துள்ளதாலும், நிலநடுக்கோட்டுக்கு அண்மையில் உள்ளதாலும், பூகம்பம் மற்றும் சூறாவளிகள் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.



பிலிப்பைன்ஸ் தேசிய மொழி எது? - Filipino, English
பிலிப்பைன்ஸ் அழைப்புக்குறி எண்? - 63
பிலிப்பைன்ஸ் இணையக்குறி என்ன? - .ph
பிலிப்பைன்ஸ் சுதந்திர தினம்? - 1898 June 12
பிலிப்பைன்ஸ் நாட்டின் பரப்பளவு எவ்வளவு? - 300,000 கி.மீ2

பிலிப்பைன்ஸ் தேசியக் கொடி?

பிலிப்பைன்ஸ் தேசிய நினைவுச் சின்னம்?

பிலிப்பைன்ஸ் மக்கள் தொகை எவ்வளவு? - 100.7 million
பிலிப்பைன்ஸ் பிரபலமான உணவு எது? - Kare Kare

பிலிப்பைன்ஸ் தேசியப் பறவை எது? - Philippine eagle

பிலிப்பைன்ஸ் தேசிய விலங்கு எது? - Carabao

பிலிப்பைன்ஸ் தேசிய மலர் எது? - sampaguita

பிலிப்பைன்ஸ் தேசியக் கனி எது? - Mango

பிலிப்பைன்ஸ் தேசிய மரம் எது? - narra

பிலிப்பைன்ஸ் தேசிய விளையாட்டு என்ன? - Arnis

பிலிப்பைன்ஸ் நாட்டின் நாணயம்? - பெசோ (PHP)

பிலிப்பைன்ஸ் தலைநகரம் என்ன? - Manila































0 comments:

Post a Comment