அம்மா என்று அழைக்காத உயிரில்லையே என்ற வைரவரிகள் செவிகளில் பாய்ந்து இதயத்தை வருடும் ஜாலம் தமிழ் கூறும் நல்லுலகில் விவரிக்க வார்த்தைகள் இல்லை. அம்மா என்ற இந்த வார்த்தை உணர்வு சார்ந்தது. உண்மையோடு உணர்ந்தால் மட்டுமே தெரியும்.
ஒரு சகோதரியாக, தாயாக, தாரமாக, தோழியாக இல்லத்தில் உள்ளோரைப் பக்குவப்படுத்தும் பாட்டியாக, அனுபவங்களின் அரவணைப்பில் வழி நடத்திச் செல்லும் ஆசானாக. இப்படி அனைத்துமாய் இருப்பவள் தாய்.
இப்படிப் பெண் தன் வாழ்நாளில் எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்கிற பாத்திரம் தான் மிக உன்னதமான இடத்தை வகிக்கிறது.
இப்படிப்பட்ட அன்னையைக் கௌரவிக்கும் இந்நாளில் தமிழ்வின் இணையத்தளமும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பொன்னான நாளாகிய உலக அன்னையர் தினத்தில் ஒவ்வொருவருக்கும் தெய்வமாக விளங்கும் அன்னையரைப் போற்றுவோம்.
எமது நோக்கம் அன்னையர் தினம் உணர்ச்சிபூர்வமான நாளாக இருக்க வேண்டுமேயல்லாமல், உலகம் முழுக்க அன்னையர் தினம் அனுசரிக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் அன்னையைப் போற்றுகிற, வாழ்த்துகிற, மகிழ்விக்கின்ற நாளாக அன்றைய தினம் மலர்ந்து மணம் பரப்ப வேண்டும்.
இன்று அகிலம் போற்றும் அன்னையர் தினத்தை கொண்டாடி மகிழ்கின்ற நாளாகத் திகழ்கிறது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment