22:44
0
ஜார்ஜ் எவரஸ்ட் என்பவர் பிரித்தானிய இந்தியாவின் புவியியலாளர். இவரின் ஆசிரியரான வில்லியம் லாம்டன் என்பவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர்.


பின்பு இவரது மறைவுக்குப்பின் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். இவரின் நினைவாகவே இமயமலைச்சிகரம் எவரஸ்ட் எனப்பெயர்பெற்றது. இவர் ஜக்கிய இராச்சியம், வேல்ஸ் நாட்டின் 1790ல் பிறந்தார்.

1806ல் வில்லியம் லாம்டன் என்பவரிடம் பெரிய இந்திய நெடுவரை வில் மதிப்பீட்டில் துணைபுரிய சேர்க்கப்பட்டார். 1823ல் லாம்டன் மறைவுக்கு பின் அம்மதிப்பீட்டை இவர் முடித்தார். 1830ல் இந்திய மதிப்பீட்டு தளபதியானார். 1843ல் தன் நாட்டுக்கு திரும்பி 1862ல் அரச புவியியல் கழகத்தின் துணை அதிபரனார். 1866ல் மரணமடைந்தார்
Newer Post
Previous
This is the last post.

0 comments:

Post a Comment