06:30
0

பணிக்கான இன்டர்வியூ என்பது பொதுவாகவே ஒரு சிக்கல்வாய்ந்த செயல்பாடுதான். ஆட்கள் எடுப்பது தொடர்பான ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக, பல நிறுவனங்கள் பலநிலைகளிலான இண்டர்வியூ செயல்பாடுகளை மேற்கொள்ளும். ஸ்கிரீனிங் இன்டர்வியூ, மனிதவள அலுவலர்கள்(HR) நடத்தும் இன்டர்வியூ, ஸ்ட்ரெஸ்(Stress) இன்டர்வியூ, Situational இன்டர்வியூ மற்றும் தொழில்நுட்ப இன்டர்வியூ என்று பலநிலைகளிலான இன்டர்வியூக்கள் நடத்தப்படுகின்றன.


Screening இன்டர்வியூ

Screening இன்டர்வியூ என்பது, ஆழமான பகுப்பாய்வு மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில், போட்டியில் இருக்கும் நபர்களின் பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுப்பதாகும். இந்தவகை இன்டர்வியூவில், ஒரு குறிப்பிட்ட நிலையிலான கேள்விகள் கேட்கப்பட்டு, அதன்படி பொருத்தமான நபர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தமுறையில் சீருடைத் தன்மையை பின்பற்ற வேண்டி, பல நபர்களுக்கும் ஒரேவிதமான கேள்விகளே கேட்கப்படும். இதுபோன்ற நேர்முகத் தேர்வுகள் வளாகங்களில் நடத்தப்படலாம். அதேசமயம், இந்தவகை நேர்முகத் தேர்வின்போது ஒருவர் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். அதிகளவிலான வேலை தேடுநர்கள் இந்த நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள நேரிடலாம். எனவே, உங்களுக்கான நேரம் மிக குறைவானதாக இருக்கலாம். எனவே, அந்த குறைந்த நேரத்திலேயே உங்களை நீங்கள் சிறப்பாக வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.

HR இன்டர்வியூ

ஒரு நிறுவனத்தின் தன்மை மற்றும் பணித் தேவைகளுக்கு ஏற்றவகையில், ஒரு நபரின் குணநலன்கள், தன்மைகள் மற்றும் திறன்களைக் கண்டறிவதே இந்தவகை இன்டர்வியூவின் முக்கிய நோக்கம். அதேசமயம், உங்களின் மொழித்திறன் மற்றும் தகவல்தொடர்பு திறனும் சோதிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட துறையில் உங்களுக்கு இருக்கும் அறிவைவிட, அத்துறையின் மீதான உங்களது ஆளுமையை சோதிப்பதே இந்த இன்டர்வியூவின் முக்கிய நோக்கம். எனவே, சம்பந்தப்பட்டக் குழுவை கவரும் விதத்தில் உங்களின் செயல்பாடு அமைய வேண்டும்.

Stress இன்டர்வியூ

ஒரு சிக்கலான சூழலை சமாளிக்கும் திறனை நீங்கள் பெற்றுள்ளீர்களா? என்பதை சோதிக்கவே இந்த இன்டர்வியூ. ஏனெனில் சிலவகைப் பணிகளுக்கு இந்த திறன் கட்டாயம் தேவை. உங்களிடம் பொதுவான நிலையில் நல்ல ஆளுமை இருந்தாலும்கூட, குறிப்பிட்ட பணிச் சிக்கலை சமாளிக்கும் திறன் இருக்கிறதா? என்பதற்கே முக்கியத்துவம் தரப்படும். எனவே, அதுதொடர்பான சிக்கலான கேள்விகள் உங்களிடம் கேட்கப்படும். நீங்கள் அளிக்கும் பதில் தவறாக இருந்தாலும்கூட, சூழலுக்கு பொருத்தமான வகையில் அது இருக்க வேண்டும்.

Situational இன்டர்வியூ

இந்தவகை இன்டர்வியூ Stress இன்டர்வியூ போன்றதே. ஒரு யூக அடிப்படையிலான சூழலை உங்களுக்குத் தெரிவித்து, அதன்பொருட்டு நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள் என்று கேட்கப்பட்டு, உங்களின் பதிலை வைத்து திறன் மதிப்பிடப்படும். எனவே, குறிப்பிட்ட பணிக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை, குழுவுக்கு நிரூபிக்கும் அளவு நீங்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

தொழில்நுட்ப இன்டர்வியூ

HR இன்டர்வியூவைத் தொடர்ந்து, இந்த இன்டர்வியூ நடைபெறும். மற்றவகை இன்டர்வியூக்களோடு தொடர்புபடுத்துகையில், இது பரந்தளவிலான மற்றும் கடினமான இன்டர்வுயூ ஆகும். சில நிபுணர்கள் குழுவாக அமர்ந்து, துறைப்பற்றிய உங்களின் ஆழமான அறிவை சோதிப்பார்கள். உங்களின் புரிந்துணர்வுத் திறனும் இதில் சோதிக்கப்படும். தொழில்நுட்பத் துறை என்பது மிக முக்கியமானது என்பதால், அதுதொடர்பாக தேர்வு செய்யப்படும் பணியாளர் தகுதியானவராக இருக்க வேண்டும் என்பதில் நிறுவனம் சிறப்பு கவனம் செலுத்தும்.

0 comments:

Post a Comment