04:56
0

ஆக்சிசன் அல்லது ஒட்சிசன், (Oxygen) நாம் வாழும் நில உலகத்தில் யாவற்றினும் மிக அதிகமாகக் கிடைக்கும் தனிம வேதிப் பொருள். வளி மண்டலக் காற்றில் நைட்ரசனுக்கு அடுத்து செழிப்புற்றிருப்பது ஆக்சிசன். இது பெரும்பாலும் பிற தனிமங்களோடு இணைந்த நிலையிலேயே நில உலகத்தில் கிடைக்கின்றது.


நீர் மண்டலப் பகுதியில் ஆக்சிசனின் செழுமை (எடை அளவில்) 85.89 . பூமியின் மேலோட்டுப் பகுதியில் கிடைக்கும் கனிமங்களில் ஆக்சைடாகக் கிடைக்கிறது. அந்த வகையில் இதன் செழுமை (எடை அளவில்) 49.13  மனித உடலில் 3 ல் 2 பங்கும், நீரில் பத்தில் 9 பங்கும் ஆக்சிசனாகும்.

ஓர் ஆக்சிசன் அணுவின் கருவினுள்ளே 8 நேர்மின்னிகளும் அதற்கு இணையாக கருவைச்சுற்றி 8 எதிர்மின்னிகளும் பல்வேறு சுழல் பாதைகளில் சுழன்றும் வருகின்றன. எனவே ஆக்சிசனின் அணுவெண் 8 ஆகும். அணுக்கருவினுள் நேர்மின்னிகள் அன்றி 8 நொதுமிகளும் (நியூட்ரான்களும்) உள்ளன.


நில உருண்டையின் காற்று மண்டலத்தில் உள்ள வளிமங்களில் முக்கியமான இரண்டு வளிமங்களில் ஆக்சிசன் ஒன்றாகும் (மற்றது நைட்ரசன்). உயிரினங்களின் உயிர்வாழ்வுக்கும் மிக இன்றியமையாது தேவைப்படுவது இந்த ஆக்சிசன். இதனால் இது உயிர்வளி என்றும் பிராணவாயு என்றும் அழைக்கப்படுகிறது.

எனினும், நிலவுருண்டையின் வரலாற்றில் தொல்பழங்காலத்தில் ( சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்) இருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் ஒரு நச்சுப் பொருளாக இருந்தது. அன்றிருந்த உயிரினங்களுக்கு ஆக்சிசன் தேவை இல்லாமல் இருந்தன. ஆனால் சில வகையான நுண்ணுயிரிகளின் நுண்ணுடலின் இயக்கத்தின் விளைவால் ஆக்சிசன் வெளிவிடப்பட்டது. இப்படி ஆக்சிசன் அதிகம் வெளியிடப்பட்டதால் அன்றிருந்த உயிரினங்கள் மாய்ந்தன என்றும் அறிஞர்கள் கருதுகின்றார்கள்

 பிற்காலத்தில் நில உலகத்தில் ஆக்சிசனின் அளவு கூடியதற்குக் காரணம், ஒளிச்சேர்க்கை வழி ஆற்றல் பெற்று ஆக்சிசனை வெளிவிடும் நுண்ணுயிர்களின் இயக்கத்தால்தான் இவ்வகையான ஒளிச்சேர்க்கை நுண்ணுயிரிகளும் பாசி போன்ற எளிய நிலைத்திணை வகைகளும்தான் நிலவுலகில் உள்ள ஆக்சிசனில் முக்கால் பங்கை (3/4) ஆக்கித்தருகின்றன.மீதமுள்ள கால் பங்கை (1/4) மரஞ்செடிகொடி வகைகள் ஆக்குகின்றன.

0 comments:

Post a Comment