சூரியன், புவி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்றபோது கிரகணங்கள் உருவாகின்றன. ஞாயிற்றுத் தொகுதியில் சூரியன் நிலையாக இருந்து ஒளிகொடுக்கும் மூலமாகும். ஆனால் புவியானது தன்னைத் தானே சுற்றுவதுடன், சூரியனையும் ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. அதே போன்று சந்திரன் புவியைச் சுற்றி வருகின்றது. இவ்வாறு சுற்றுகையில் சூரியன், சந்திரன், புவி ஆகியன ஒரே நேர்கோட்டில் அமைந்து விடுகின்றன. இவ்வாறு ஏற்படும் கிரகணங்களை இரண்டாகப் பிரித்து நோக்கப்படும். அவையாக சூரிய கிரகணம், சந்திரகிரகணம் என்பவையாகும்.
சூரியகிரகணம் எனும்போது சூரியனுக்கும, புவிக்குமிடையில் ஒரே நேர்கோட்டில் சந்திரன் அமைகின்றபோது சந்திரனின் நிழலானது புவியின் மீது விழும். இவ்வாறு சந்திரனின் நிழல் புவியின் மீது படுகின்றவாறு முறையே சூரியன், சந்திரன், புவி என்பன ஒரே நேர்கோட்டில் அமைகின்றபோது அது சூரிய கிரகணம் எனப்படுகின்றது.
சந்திர கிரகணம் எனும்போது , சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையில் ஒரே நேர்கோட்டில் புவி அமைகின்றபோது புவியின் நிழலானது சந்திரன் மீது விழும். இவ்வாறு புவியின் நிழல் சந்திரனின் மீது படுகின்றவாறு முறையே சூரியன், புவி, சந்திரன் என்பன ஒரே நேர்கோட்டில் அமைகின்றபோது அது சந்திர கிரகணம் எனப்படுகின்றது.

0 comments:
Post a Comment