இயற்கையான விதத்தில் தோற்றம் பெறும் எந்தவொரு நிகழ்வும் மனிதகுலத்திற்கும் அவனுடைய வளங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமாயின் அவை இயற்கை அனர்த்தங்கள் எனப்படுகின்றன. புவிநடுக்கங்கள், சுனாமி அலைகள், சூறாவளிகள், வெள்ளப்பெருக்கு, மின்னல் தாக்கம், வரட்சி, நிலச்சரிவு, எரிமலை வெடிப்பு முதலியன இயற்கை அனர்த்தகளுக்கு உதாரணங்களாகும். இவற்றுள் இலங்கையைப் பொறுத்தவரையில் வெள்ளப்பெருக்கு, மின்னல்தாக்கம், வரட்சி, நிலச்சரிவு, சுனாமி தாக்கம், சிறியளவிலான புவிநடுக்கம் ஆகியன இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பாதிக்கும் அனர்த்தங்களில் நிலச்சரிவு பெரும்பாலான உயர்மலைசாய்வுப் பதிகளிலும், வெள்ளப்பெருக்கு ஒரு சில நதிகளையடுத்த பகுதிகளிலும், நகரப்பகுதிகளிலுமே இடம்பெறுகின்றது. ஆனால் நாட்டின் அனைத்துப் பகுதியையயும் தாக்கக்கூடிய அனர்த்தங்களுள் ஒன்றாக இடிமின்னல் தாக்கம் காணப்படுகின்றது. இடிமின்னல் நிகழ்வானது சிறப்பாக அயனவலயத்திற்கென்றே அமைந்த அனர்த்தங்களுள் ஒன்றாகக் காணப்படுகின்றது. இலங்கையும் அயனவலயததிற்கள் ஒரு நாடாக அமைந்து விடுகின்றமையால் மின்னல் தாக்கத்திற்கு அடிக்கடி உள்ளாகும் நாடாக காணப்படுகின்றது. உஉலகிலெ அதிகளவில் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகும் நாடாக சிங்கப்பூர் காணப்படுகின்றபோதிலும் இலங்கையிலும் குறிப்பிட்டளவிலான மின்னல்தாக்கங்கள் இடம்பெறுகின்றன.
பொதுவாக இடிமின்னல் என அழைக்கப்படுவது மேகங்களின் வேறுபட்ட மின்னேற்றங்களினால் ஏற்படுகின்ற தாக்கம் பெரும்சத்தத்துடன் வானில் பாரிய ஒளிவலயத்தையும் சத்தத்தையும் ஏற்படுத்துகின்றபோது அவை இடிமின்னல் எனப்படுகின்றன. இடிமின்னல் வேளையில் முதலில் ஒளியும், அதன் பின்னர் சத்தமும் எம்மை வந்தடைவதற்கக் காரணம் ஒளியானது ஒலியைவிட அதிகவேகம் கொண்டமையே ஆகும்.
மின்னல் உருவாகும் விதத்தினை நோக்குகின்றபோது அது பெரும்பாலும் மழைவீழ்ச்சியுடன் சம்பந்தப்பட்ட தொழிற்பாடுகளின்போது ஏற்படுகின்றது. ஆவியாக்கல் செயற்பாட்டின்போது புவியிலுள்ள நீர் ஆவியாகி மேலெழுகின்றது. அவ்வாறு மேலெழுகின்ற மேகங்களின் மேற்பாகம் வளியுடன் உராய்வதால் அது வெப்பமேற்றப்பட்டு மின்னேற்றத்தைப் பெறுகின்றது. மேகங்களின் மேற்பகுதியில் நேர்மின்னாகவும், மேகங்களின் அடிப்பகுதி மறை மின்னேற்றத்தையும் கொண்டிருக்கும். இவ்வாறு முகில்கள் நேர் எதிரான மின்னேற்றத்தைக் கொண்டிருப்பதால் ஒன்றுடன் ஒன்று மோதி தீப்பொறி ஏற்பட்டு மின்னலாக மாறுகின்றது. இதன்போது ஏற்படுத்தப்படும் மின்னோட்டம் பூமிக்கு கடத்தப்படும்போது அது மரங்கள், கட்டங்கள், கொடிக்கம்மபங்கள் என்பவற்றின் ஊடாக கடத்தும். அவ்வேளையில் மனிதர்கள் அகப்பட்டால் அவர்களுக்கூடாக கடத்தப்படமுற்படும்போதே அது மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
மின்னல் தாக்கமானது மழைக்hலங்களில் பெருமளவில் ஏற்படுகின்ற ஒரு நிகழ்வாகும். இலங்கையைப் பொறுத்தவரை மார்ச், ஏப்ரல், ஒக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் மின்னல் தாக்கம் இடம்பெறுகின்றது. அதுவும் குறிப்பாக மேற்காவுகை மழை , சூறாவளி மழை நிகழும் காலப்பகுதிகளில் இவற்றின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். இடிமின்னல் நிகழ்வுகளினால் உலகில் அதிகளிவில் உயிராபத்துக்கள் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் உள்ள ஒரு புள்ளிவிபரவியல் தகவல்களின்படி ஒவ்வொரு வருடமும் மின்னல் தாக்கி சுமார் நூறுபேர் மரணமடைகின்றனர் எனவும், பலநூறுபேர் ஊணமடைகின்றனர் எனவும் குறிப்பிடுகின்றது. இது அமெரிக்காவைப் போறுத்தவரையில் சூறாவளி போன்றவற்றினால் ஏற்படும் தாக்கத்தை விட அதிகமாகும்.
இத்தகைய மின்னல் தாக்த்திற்கு இலங்கையிலும் மிகஅதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்படாமலில்லை. 2007 ஆம் ஆண்டில் பொலநறுவை பகுதியில் இராணுவத்தினர் மழைகாலத்தில் பயிற்சியெடுத்துக்கொண்டிருந்தபோது சுமார் 40 பேரளவில் பாதிக்கப்பட்டதாகவும், அண்மையில் 2010 சித்தாண்டியில் வயலில் உழவுஇயந்திரத்தின்மூலம் நிலத்தை பண்படுத்திக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்திருப்பதையும் நாங்கள் பத்திரிகைகள் அல்லது ஏதோவொரு விடயத்தில் அறிந்திருக்கக்கூடும்.
இவ்வாறு மிகக்குறுகிய நேரத்தில் தாக்கும் மின்னல் தாக்க பாதிப்பிலிருந்து எம்மைப் பாதுகாத்தக்கொள்வது அவசியமாகும். எனவே மின்னல் தாக்கம் பற்றிய விழிப்பணர்வு எம்மத்தியில் அறிந்திருப்பதுடன், அவற்றை இனம் காணுவதுடன் அவற்றின் பாதிப்பிலிருந்து எம்மைப் பாதகாத்துக் கொள்வதற்குரிய வழிகளையும் அறிந்திருத்தல் அவசியமாகும். அந்தவகையில் அனர்த்தத்திற்கு முன்னரான பாதுகாப்பு நடவடிக்கைகளையும், அனர்த்த வேளையின்போதான நடவடிக்கைகளையும நாம் முறையாகக் கடைப்பிடிக்கின்றபோது இவற்றை தவிர்த்துக் கொள்ளலாம்.
இடிமின்னல் பொதுவாக ஏறபடுகின்ற காலப்பகுதியை அறிந்து வைத்திருத்தல் வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் காலரீதியில் பார்க்கின்றபோது ஏப்பிரல், மே, ஒக்டோபர், நவம்பர் மாதங்களிலும் மற்றும் மேற்காவுகைமழை, சூறாவளி மழைக் காலப்பகுதிகளிலுமே ஏற்படுகின்றது. எனவே அத்தகைய காலங்களில் நாங்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.
வானிலை அவதானிப்பு நிலையங்களால் வெளியிடப்படும் வானிலை எதிர்வுகூறல்களை செவிமடுத்தல். சில வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்படும்போது இந்நாட்களில் நாம் பாதுகாப்பாக இருத்தல் வேண்டும்.
இடிமின்னலானது ஏதாவதொரு பொருளுக்கூடாக புவியில் கடத்துகின்றது. சில வேளைகளில் உங்கள் வீடுகளுக்கு அருகில் மரங்கள் ஏதாவது இல்லையெனில் வீட்டை நேரடியாக தாக்கலாம். எனவே வீடுகளுக்கு அருகில் உயரமான மரங்களை வளர்க்கவேண்டும். இதன்மூலம் மின்னல் தாக்கமானது மரத்தினூடாகக் கடத்தப்பட்டு எமது வீட்டிற்குரிய பாதிப்பு தடுக்கப்படுகின்றது.
உயர்ந்த கட்டங்களில் இடிதாங்கியை அமைத்தல் வேண்டும். இதன் மூலம் இடிதாங்கிகள் மின்னல் தாக்த்தை அயற்பறத்திற்கு விடாது தாம் தாங்கிக் கொள்வதுடன் அதனால் கட்டடங்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களைத் தடுத்தும் விடுகின்றன.
இடிமின்னல் வேளைகளில் திறந்த வெளிகளில் நிற்பதையோ அல்லது விளையாடுவதையோ அல்லது வயல்ளில் வேலைசெய்துகொண்டிருப்பதையோ தவிர்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அந்தப் பரந்த வெளியில் உயர்ந்த பொருளாக நிங்களே இருக்கும்போது நேரடியாக மின்னல் தாக்கலாம்.
சந்தர்ப்பவசத்தால் வெட்டவெளியில் இருக்கநேர்ந்தால் மின்னலின்போது தரையில் படுத்துவிடாதீhகள். தரைக்கும் உடலுக்குமான தொடர்பினை இயலுமானளவில் குறைத்துக்கொள்ளக்கூடிய வகையில் குந்தி அமருங்கள் . இதனால் ஓரளவேனும் மின்னல் தாக்கத்தின் பாதிப்பை குறைக்கலாம்.
இடிமின்னல் வேளைகளில் தொலைபேசிக் கோபுரங்கள், உலோகக் கொடிக்கம்பங்கள் , திறந்த ஒதுக்கிடங்கள் அருகாமையில் நிற்பதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். உயரமான மரங்களுக்கு கீழ் ஒதுங்குவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் மரங்களை நோக்கி இலகுவில் மின்னல் கடத்தப்படக்கூடியது ஆகும்.
மூடப்படாத வாகனங்களில் இடிமின்னல் காலங்களின்போது செல்வதைத் தவிர்;க்கவேண்டும். குறிப்பாக துவிச்கரவண்டி, மோட்டார் வண்டி போன்றவற்றிலொ அல்லது உழவு இயந்திரங்களிலோ செல்வதைத் தவிர்க்கவேண்டும்.
வீட்டிலுள்ள மின்தொடர்புகள், அண்டனா தொடர்பகளைத் துண்டித்தல் வேண்டும். தொலைக்காடசிகள், கணனிகள், மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் என்பவற்றை மின் இணைப்பிலிருந்த துண்டிக்கவேண்டும். இல்லெயெனில் அவை உயர் மின்சார தாக்கத்தினால் பழுதடைந்துவிடும். தொலைக்காட்சி மற்றும் நிலத்தொலைபேசிகளுக்குரிய அண்டனாக்களின் தொடர்பையும் துண்டித்தல் வேண்டும். மேலும் எந்தவிதமான ஆளிகளை அழுத்தும் செயற்பாடகளையோ அல்லது மின் உபகரணங்கபை; பயன்படுத்துவதையோ தவிர்க்கவேண்டும்.
எனவே இதிலிருந்து மின்னல் தாக்கம் பற்றி அறிந்துகொள்வதுடன், அவற்றிலிருந்து பாதிப்புக்களைத் தடுப்பதற்குமுரிய வழிகளைக் கையாண்டு கொள்வதனூடாக வீண் உயிரிழப்புக்களையும் சேதங்களையும் குறைந்துக்கொள்ளலாம்.

0 comments:
Post a Comment