08:39
0
நிலமானது விவசாய நடவடிக்கைகளுக்கு எத்தகைய விதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அது விவசாய நிலப்பயன்பாடு ஆகும். விவசயா நடவடிக்கைகளாக நெல், வீட்டுத்தோட்டம், றப்பர், தென்னை, தேயிலை, சேனைப்பயிர்ச்செய்கை, பிறபயிர்கள் (கரும்பு, வாழை, முந்திரிகை) என்பன அடங்குகின்றன.

•    தரப்பட்டுள்ள பிரதேசத்தில் நெற்பயிர்ச்செய்கை, வீட்டுத்தோட்டம், சேனைப்பயிர்ச்செய்கை, மற்றும்  ஏணைய பிறபயிர்ச்செய்கை வகைக்குள் அடங்கும் பயிhகளும் இங்கு விவசாய நிலப்பனயன்பாட்டிற்குள் உள்ளடங்குகின்றன.
•    பிரதேசத்தில் மொத்த நிலப்பரப்பில் அண்ணளவாக ¾ பங்கு நிலம் விவசாய நிலப்பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
•    பிரதேசத்தின் கிழக்கெல்லலைப் பகுதியில் பற்றைக்காடுகள் மற்றும் தென்கீழ் பகுதியில் காணப்படும் மலையுடன் கூடிய காடுகளைக் கொண்ட பிரதேசம் தவிர்ந்த ஏணைய பிரதேசங்கள் விவசாய நிலப்பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
•    பிரதேசத்திலுள்ள விவசாய நிலப்பயனபாட்டிற்குரிய நீர்த்தேவையானது மழைநீh, சிறிய ஆறுகள், களங்கள் என்பவற்றிலிருந்து பூர்த்தி செய்யப்படுகின்றது.
•    பிரதேசத்தில் மிகவும் அதிகளவில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. பிரதேசத்தின் மேற்குஎல்லை, தென்மேல் பகுதி, மத்திய பகுதி ஆகிய பிரதேசங்களில் நெற்செய்கை பரம்பிக் காணப்படுகின்றது. பிரதேசத்pன் மொத்த நிலப்பரப்பில் அண்ணளவாக நெற்பயிர்ச்செய்கையானது, ½ பங்கு கொண்டுள்ளதுடன், இதனை மொத்த விவசாய நிலப்பயன்பாட்டுடன் ஒப்பிடுகின்றபோது ¾ பங்காகவும் காணப்படுகின்றது. நெற்பயிர்ச்செய்கைக்கு அவசியமான சமதரையான தாழ்நிலம், நீhப்பாசன வசதி முதலின இங்கு சாதகமான காரணிகளாகக் காணப்படுகின்றன.
•    பிரதேசத்தில் நெற்பயிர்ச்செய்கைக்கு அடுத்த விவசாய நிலப்பயன்பாடாக வீட்டுத்தோட்டம் காணப்படுகின்றது. வீதிகளை அண்டிய பகுதிகளிலும், குளங்கள், கால்வாய்கள் மற்றும் சதுப்பு நிலங்களை அண்டிய பகுதிகளிலும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்ளப்படுகின்றது. மொத்தஅ விவசயா நிலப்பயன்பாட்டில் அண்னளவாக 20 சதவீதம் வீட்டுத்தோட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
•    பிரதேசத்தில் நெற்பயிhச்செய்கை மற்றும் வீட்டுத்தோட்டங்கள் மேற்கொள்ளப்படாத பகுதிகளில் சேனைப் பயிhச்செய்கை மற்றும் பிறபயிர்ச்செய்கை வகையொன்றும் மேற்கொள்ளப்படுகின்றது. காடுகளை அண்டிய பகுதிகளிலும், மலைச்சரிவுகளிலும் சேனைப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. மலைச் சாய்வுப் பிரதேசத்தில் பிறபயிர்ச்செய்கை வகையொன்று மேற்கொள்ளப்படுகின்றது. மலைச்சரிவு என்பதால் இப்பிறபயிர்வகை ஏதாவது மரநடுகை திட்டமாக விருக்கலாம். மொத்த விவசாய நிலப்பயன்பாட்டில் அண்ணளவாக  30 சதவீதம் சேனைப்பிர் மற்றும் பிறபயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.



0 comments:

Post a Comment