இங்கு போசாக்கான உணவின்மை, ஆரோக்கியமான உடல் பாதுகாப்பின்மை, போதியளவு மருத்துவ சுகாதார வசதிகள் இன்மை, குறைந்தளவான அடிக்கட்டுமான வசதிகள் போன்ற பல விடயங்களும் வறுமையான நாடுகளில் காணப்படுகின்றன. வளர்ந்து வருகின்ற நாடுகளில் முக்கியமான கவனத்திற்கு உட்படவேண்டிய நாடுகள் இதில் உள்ளடங்கப்படுகின்றன. அந்நாடுகள் தொடாபான வறுமை பற்றிய பார்வை முக்கியமாகக் கொள்ளப்படுவதோடு இயற்கையாகக் காணப்படுகின்ற வளப்பற்றாக்குறை, தொழில்நுட்பத்தில் பின்தங்கிய நிலை என்பன முக்கிய காரணியாக சுட்டிக்காட்டபடுகின்றன. கல்வியறிவு போசாக்க என்பன மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாக பல அறிக்கைகள் சுட்டிக் காட்டகின்றன. குறிப்பாக இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நடைமுறையில் காணப்படுகின்ற கொள்கைகள், அரசியல் ஸதிரமற்ற தன்மைகள் என்பனவும் காரணங்களாக அமைகின்றன.
இவ்வாறு பொதவாக வறுமையானது காணப்படுகின்றது. உலகில் இன்று நகரங்களின் சனத்தொகை வளர்ச்சியடைந்து கொண்டே செல்கின்றது. இதனால் உலகில் மில்லியன் நகரங்கள், மெகா நகரங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. ஆரம்ப காலங்களில் நகரசனத்தொகை வளர்ச்சி என்பது ஒரு மந்த கதியிலேயே இடம்பெற்று வந்தது. ஆனால் இன்று நகரவளர்ச்சி திடீரென அதிகரித்து வருகின்றது. உலகில் நகரங்களின் பரம்பல் பற்றி நோக்கும்போது அது 1950 களில் விருததியடைந்த நாடுகளிலேயே அதிக நகரங்கள் காணப்பட்டன. 2000 ஆணடுகளில் வளர்முக நாடகளில் காணப்பட்ட நகரங்களே அதிக சனத்தொகை கொண்டஇநகரங்களாக மாற்றமடைந்தன.
இதேவேளை 2015 ஆம் ஆண்டளவில் அதிக சனத்தொகை கொண்ட நகரங்கள் தொடர்ந்தும் வளர்மக நாடகளிலேயே காணப்படும் என்றும், அத்துடன் அவை பெருமளவில் ஆசியாவில் காணப்படும் எனவும் எதிhவுகூறப்படுகின்றது.
0 comments:
Post a Comment