உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார கூறியுள்ளார். முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் செப்டெம்பர் மாதம் ஒன்பதாம் திகதி நிறைவு பெறவுள்ளதாகவும், இரண்டாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் செப்டெம்பர் மூன்றாம் திகதி தொடக்கம் 16 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளின் மூன்றாவது கட்டம் செப்டெம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் எட்டாம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளன. இதேவேளை, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை செப்டெம்பர் மூன்றாம் திகதி ஆரம்பிக்க பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இந்த பணியில் சுமார் ஏழாயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு எண்ணியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment