பாறைகளிலிருந்து சிதைவடைந்த துகள்களே மண் எனப்படுகின்றது. மண்ணானது புவிமேற்பரப்பிலிருந்து கீழ்நோக்கி கொண்டிருக்கும் பருப்பொருளின் தன்மை, சேதனப்பொருள், நிறம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு பல படைகளாகப் பிரிக்கப்படுகின்றது. அந்தவைகயில் மண் படைகளை பின்வருமாறு O , A, B, C எனப் பிரிக்கலாம்.
O படை :- மண்ணின் அதியுயர் மேற்படையாக இப்படை காணப்படுகின்றது. இது சேதனப் பொருட்களின் மட்குகளை அதிகம் கொண்டிருப்பதால் கடும் நிறத்தைக் கொண்டிருக்கம். வழமையாக மேற்பரப்பு மட்டத்திலும் அதனைவிட சற்று ஆழமான இடத்திலும் காணப்படும். இலைகள், வேர்கள், தண்டுகள் மற்றும் அண்மையில் சேர்ந்த குப்பை கூழங்களையும் இப்பகுதியில் காணமுடியும். வழமையாக இது ஓர் மெல்லிய மட்படையாக காணப்பட்ட போதும் சில இடங்களில் பல cm ஆழம் வரை இம் மட்படை காணப்படும்.
A படை :-இப்படையானது உறிஞ்சு வலயம் என அழைக்கப்படுகின்றது. இது ழு மட்படையின் எல்லையின் கீழ் இருக்கும் மெல்லிய படையாகும். ழு மட்படை எல்லையின் கீழ் இருக்கும் இம்மட்படையானது மிகவும் மெல்லிய மட்படையாகும். பயிர் செய்யப்படும் நிலப்பரப்பில் இதுவெ மேற்பரப்பு எல்லையாக இருக்கும். இதன் அடிப்பகுதி B மட்படையின் சில பகுதிகளை உள்ளடக்கிய கலவையாக காணப்படும். சேதனத்திரவியங்களின் ஒன்றுதிரள்வினால் கடுமையான நிறத்தில் காணப்படும் மட்படையாகும்.
நிலமேற்பரப்பில் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியினுடைய பகுதி இந்த மண்படையினூடாக கீழ்நோக்கிக் கசிகின்றது. இச்செயற்பாடு மண்படையின் கீழ்மட்டத்திற்கு கனியுப்பக்கள் மறைத்து எடுத்துச் செல்லப்படுவதற்கொ அல்லது உறிஞ்சப்படுவதற்கோ காரணமாகின்றது. ஈரக்காலநிலைப் பிரதேசத்தில் இரும்பு ஒட்சைட்டு மற்றும் மறைந்துள்ள கல்சைட் மதலியன கீழ்நோக்கி அதிகமாக உறிஞ்சப்படுகின்றது. உறிஞ்சப்படுவதனால் அடிப்பகுதி மணலைக் கொண்ட பகுதியாகக் காணப்படும். ஆனால் உயிர்சுவடுகளால் யு மட்படையின் மேற்பகுதி வழமையாக கடுநிறத்தில் காணப்படுகின்றது.
B படை:- இப்படையானது கழுவிச் சேர்த்தபடை என அழைக்கப்படுகின்றது. வண்டல் மட்படையின் ஒன்று திரள்வு அல்லது A மட்படையின் கீழ் வானிலையாலழிதல் செயன்முறைக்குரிய சான்றுகளை இம்மட்படை எடுத்துக்காட்டுகின்றது. O மட்படையில் இருந்து கழுவி எடுத்துச்செல்லப்பட்ட சிறிய பருப்பொருட்கள் மற்றும் A மட்படையின் எல்லையில் உள்ள மட்பொருட்கள் ஆகிய இரண்டினதும் ஒன்று திரள்வு காணப்படும். நீh ஊடுருவிச் செல்வதில் காணப்படும் பற்றாக்குறை அல்லது போதுமான நீரில் காணப்படும் பற்றாக்குறை பருப்பொருட்களை ஆழத்தில் எடுத்துச் செல்வதற்குத் தடையாக உள்ளது.
C படை:- தாய்பாபறையில் இருந்து பூரணமாக வானிலையாலழிதலுக்குட்படாத பொருட்கள் கொண்டதாக ஊமட்படை காணப்படுகின்றது. இப்படையில் தாய்ப்பாறையின் இயல்பே அதிகளவில் காணப்படும். இம்மட்படையில் தாவரவேர்களுடாக கிழே கசிகின்ற மழைநீரினூடான இரசாயணமுறையாலழிதல் அதிகளவில் இடம்பெறுவதுடன், உறைபனியின் பொறிமுறையாலழிதலும் இடம்பெறும்.
அக்சயன்
0 comments:
Post a Comment