அதிகரித்துச் செல்லும் தற்போதைய வாழ்க்கை செலவுகளை கருத்தில் கொண்டு மாதம் 500 ரூபாவுடன் மாணவர் ஒருவர் தனது கல்விச் செலவை சமாளிக்க முடியாது எனவே புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தரம் 5 புலமைப்பரிசில் பெற்றவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை ரூபா 500 இலிருந்து 2000 ரூபாவாக அதிகரிக்க வேண்டும். அதிகரித்துச் செல்லும் தற்போதைய வாழ்க்கை செலவுகளை கருத்தில் கொண்டு மாதம் 500 ரூபாவுடன் மாணவர் ஒருவர் தனது கல்விச் செலவை சமாளிக்க முடியாது என்பது வெளிப்படையான உண்மை.
அதன்படி தரம் 5 புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்க வருடாந்தம் 490 மில்லியன் ரூபா தேவைப்படுகின்றது. அதன்படி கடந்த சில வருடங்களாக உரிய சமயத்தில் நிதி கிடைக்காமையால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் உதவிப்பணம் கிடைக்கவில்லை. மேலும் 2013 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தோர் வீதம் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தவறான அறிக்கை. எனினும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் வீதம் பற்றி பேசுவது அர்த்தமற்றது இங்கு வெட்டுப்புள்ளியே கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். வெட்டுப்புள்ளியே பிரபல பாடசாலைகளில் அனுமதி பெறுவதையும் உதவித்தொகை பெறுவதையும் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment