05:35
0
கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை, 1950ம் ஆண்டில், சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனம் உருவாக்கியது. வெப்ப மண்டல நாடுகள் என அழைக்கப்படும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய, எட்டு நாடுகள் ஒரு குழுவாகச் சேர்ந்து, வட இந்துசமுத்திரத்தில் (வங்கக் கடலில்) உருவாகும் புயலுக்கு, 2004ம் ஆண்டு முதல் பெயரிட்டு வருகிறது. 

 ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அந்தந்த நாட்டு மொழிகளில் எட்டு பெயர்கள் என, மொத்தம், 64 பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியல்தயாரிக்கப்பட்டது. இதிலிருந்து, சுழற்சி முறையில் புயலுக்கு பெயர் வைக்கப்படுகின்றன.

இதன்படி, ஒடிசாவை தாக்கிய புயலுக்கு, தாய்லாந்து மொழியில், பைலின் (நீலக்கல்) என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. தானே (மியான்மர்), முர்ஜன் (ஓமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து) வரிசையில், அடுத்து வங்கக் கடலில் உருவாகும் புயலுக்கு, ஹெலன் (வங்கதேசம்) என, பெயர் சூட்டப்படும்.

அக்சயன்

0 comments:

Post a Comment