2012 ம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைந்த மாணவர்ககள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதற்கான வெட்டுப்புள்ளிகள் நவம்பர் முதல் வாரத்தில் வெளிவருமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவி பேராசிரியை ஷானிக்கா ஹிரிப்புரேகம தெரிவித்தார்.
இவ்வருடம் வெளிவரவுள்ள வெட்டுப் புள்ளிகளடிப்படையில் 24 ஆயிரம் மாணவர்கள் நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்வதற்கென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.
கிடைக்கப்பெற்றுள்ள விண்ணப்பங்களடிப்படையில் பட்டப்படிப்பிற்கான ஒவ்வொரு பீடத்திற்குரிய வெட்டுப் புள்ளிகள் தீர்மானிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்படவுள்ள மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் பொதுநலவாய மாநாட்டினை தொடர்ந்து முன்னெடுக்கப்படுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
0 comments:
Post a Comment