00:53
0
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 24 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. 

 நன்கு ஆராய்ந்ததன் பின்னரே இம்முறை வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஷெனிக்கா ஹிரிம்புரேகம தெரிவிக்கின்றார். கஸ்டப் பிரதேசங்களில் சில பாடநெறிகளுக்கான வெட்டுப்புள்ளிகள் உயர்ந்த மட்டத்தில் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். மன்னார், முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் உயர்ந்த மட்டத்தில் வெட்டுப்புள்ளிகள் காணப்படுவதாக ஆணைக்குழுவின் தலைவர் கூறுகின்றார்.

 வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதுடன், வேறு பாடநெறிகளுக்காக திறமைகளை கருத்திற்கொண்டும் மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிக்கின்றார். இதன் ஊடாக இம்முறை சுமார் 24 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மேலும் தெரிவித்தார்

0 comments:

Post a Comment