02:23
0
கல்வி முகாமைத்துவக் கட்டமைப்பில் தமிழ்மொழி மூலமான பாடசாலைகளுக்கான
கல்விச் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் மாகாண மட்டங்களில் சகல பிரிவுகளையும் உள்ளடக்கிய சுயநிர்ணயம் கொண்ட நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என மாற்றுக் கருத்தாடலுக்கான அமையம் முன்மொழிந்துள்ளது .

' தமிழ்மொழி அமுலாக்கலை அர்த்தமுள்ளதாக்குவோம் ' என்ற நோக்குடன் கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு முன்மொழியப்பட்டுள்ளது .

கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்துள்ள குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது .

கொள்கை வகுப்பாளர் , திட்டமிடுவோர் அரசியல் அமைப்பிற்கு ஏற்ப தமிழ்மொழி கல்வி அமுலாக்கலை நெறிப்படுத்துவதற்கும் வழங்குவதற்கும் பொறிமுறைகள் ஏற்படுத்தல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன .

அத்துடன் தொடர் சுற்றறிக்கைகள் , அறிவுறுத்தல்கள் என்பனவற்றை சமகாலத்தில் தமிழ்மொழி மூலமான தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது முதல் நியமனக்கடிதங்கள் உட்பட படிவங்கள் தயாரித்தல் போன்ற எல்லா ஆவணங்களும் மும்மொழிகளிலும் தயாரிக்கப்படவேண்டும் எனவும் முன்மொழியப்பட்டுள்ளது .

இதேபோல் பொதுநிர்வாகச் சுற்றறிக்கை இல .15/90 இற்கு அமைய சகல அலுவலகங்களிலும் பொதுசனத் தொடர்பு உட்பட எல்லாப் பிரிவுகளிலும் தமிழ்மொழியில் தேர்ச்சியுள்ள அலுவலர்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் . கருத்தரங்குகள் மாநாடுகளின் போது மும்மொழியையும் அமுல்படுத்துவதற்குரிய தொழில்நுட்ப சாதன வசதிகளை ஏற்படுத்தவேண்டும் . தமிழ்மொழி மூலம் கல்வியை சமமாக வழங்குவதற்கு அரசின் சமத்துவம் , சமவாய்ப்பு , ஒப்புரவு ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்துவதை உறுதிசெய்வதற்கு சகல பிரிவுகளுக்கும் பாரபட்சமின்றி பொருத்தமான நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்தவேண்டும் . கல்விக்கான நிதி ஒதுக்கீடு மாணவர்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப தமிழ்மொழி மூலக் கல்விக்கும் ஒதுக்குவதை உறுதிப்படுத்தவேண்டும் . குறைந்த எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளுக்குரிய பாதிப்பு வராதிருப்பதை விசேட ஏற்பாடுகள் மூலம் சரிசெய்யவேண்டும் . தெரிவுப் பிரமாணங்களில் இனவிகிதாசாரத்தையும் மாவட்டத் தொகையையும் உள்ளடக்குவதன் மூலம் தமிழ் மொழி மூல மாணவர்களின் உயர்கல்வியை உறுதிசெய்யவேண்டும் . முகாமைத்துவ உதவியாளர் சேவை ஆட்சேகரிப்பில் பொதுவான தேவைகளுக்கு மேலதிகமாக கல்வித்துறையில் சேவை செய்வதற்கான ஆட்சேர்ப்புச் செய்யவேண்டும் போன்ற விடயங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன .

அத்துடன் தமிழ்மொழி மூலக்கட்டமைப்பு அல்லது பொறிமுறைக்கான விதப்புரையில் , தனிநபரை பாதிப்பதை , குறிப்பிட்ட வகுப்பினரைப் பாதிப்பதை , தமிழ்மொழி மூலக்கல்வியை பாதிப்பதை கருத்திற்கொண்டு கொள்வனவிற்கு ஏற்ப ஆளணிகளின் எண்ணிக்கையை அனுமானிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

0 comments:

Post a Comment