08:31
0
இம்முறை உயர் தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளனர். 

 இதன்போது குறித்த மாணவர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்த ஜனாதிபதி, தாய்நாட்டின் பெருமையை பாதுகாத்து, நாட்டுக்கு பயனுள்ள பிரஜைகளாக உருவாகுமாறு கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 உயர் தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார். 

 இதனைத் தவிர மடிக்கணனிகள் மற்றும் அகராதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

0 comments:

Post a Comment