அரச சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகள் அனைவருக்கும் அடுத்த
மாதத்திற்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது
ஏற்கனவே குறித்த பயிலுநர் பட்டதாரிகள் வெற்றிடங்கள் நிலவும் நிறுவனங்களில் தொழிலில் அமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பீ.பி. ஆபேகோன் கூறியுள்ளார் .
மாகாண சபைகளின் இணக்கப்பட்டுடன் இவர்களுக்கான நியமனங்களை வழங்கவுள்ளதாகவும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது .
தொழில் வாய்ப்பின்றி இருந்த 52 ஆயிரம் பட்டதாரிகள் அண்மையில் அரச சேவையில் பயிலுநர் பட்டதாரிகளாக இணைத்துக்கொள்ளப்பட்டனர் .
எவ்வாறாயினும் இவர்களில் சுமார் ஏழாயிரம் பேர் ஏற்கனவே வேறு பதவிகளுக்கு மாறிச் சென்றுள்ளனர் ஒருசில மாவட்டங்களில் பயிலுநர் பட்டதாரிகள் மேலதிகமாக இருக்கின்றமையும் தெரியவந்துள்ளது .
இவர்களின் வதிவிடங்களுக்கு அண்மித்த மாவட்டங்களில் நிரந்தர நியமனங்களை வழங்குவது தொடர்பிலும் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆலோசித்து வருகின்றது .
0 comments:
Post a Comment