ஆசிரியர் கலாசாலைகளில் இரண்டுவருட கால ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு
நேர்முகப் பரீட்சைகள் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறுகின்றது .
அரசாங்க பாடசாலைகளில் மூன்று வருடகால ஆசிரியர் சேவையை நிறைவு செய்தவர்களும் தனியார் பாடசாலைகளில் ஆசிரியர்களில் ஒருவருட சேவையை பூர்த்தி செய்தவர்களும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் .
கோப்பாய் , மட்டக்களப்பு , அட்டாளைச்சேனை , கொட்டகலை உள்ளிட்ட நான்கு தமிழ்மொழி மூல ஆசிரியர் கலாசாலைகள் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள ஒன்பது ஆசிரியர்கள் கலாசாலைகளுக்கும் பயிற்சிக்கு ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன .
கோரப்பட்ட விண்ணப்ப நிபந்தனைக்கு அமைய விண்ணப்பித்து தகைமைபெற்றவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் .
0 comments:
Post a Comment