03:16
0
2012-2013 ஆண்டுக்காக மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு இணைத்துக் கொள்ளும் நடவடிக்கை ஜனவரி இறுதி வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

 பொறியியல் மற்றும் பௌதீகவியல் பிரிவு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் முதலில் தொடங்கி வைக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் க்செனிகா ஹிரும்புரேகம தெரிவித்துள்ளார்.

 2012 க.பொ.த உ/த பரீட்சையில் சித்தியடைந்த 23,125 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். 

 தலைமைத்துவ பயிற்சியின் பின்னர் மாணவர்கள் முறையாக பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படுவர் என க்செனிகா ஹிரும்புரேகம குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment