00:07
0
நமக்கெல்லாம் புதிய ஏழு உலக அதிசயங்கள் தான் தெரியும், ஆனால் பழங்கால உலக அதிசயங்கள் மனிதரால் கட்டப்பட்ட அமைப்புக்களாகும்.


கிசாவின் பெரிய பிரமிட்(Great Pyramid of Giza)

கிசாவின் பெரிய பிரமிட், பழங்கால எகிப்திய பாரோ(அரசன்) கூபுவின் சமாதியாகும் இது. கி.மு 2680ல் கட்டிமுடிக்கப்பட்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

பெரிய பிரமிட் 137 மீட்டர்கள் (481 அடி) உயரமும், ஒரு பக்கம் 235 மீட்டர்கள் (775 அடிகள்) கொண்ட சதுர வடிவ அடிப்பகுதி 5.5 ஹெக்டேயர்கள் (13.5 ஏக்கர்கள்) பரப்பளவையும் கொண்டுள்ளது.




பாபிலோனின் தொங்கு தோட்டம்(Hanging Gardens of Babylon)

பாபிலோனின் தொங்கு தோட்டம் மற்றும் பாபிலோனின் சுவர் என்னுமிரண்டும், நெபுச்சட்னெஸ்ஸார் என்பவனால், கி.மு 600ல், ஈராக்கில் கட்டப்பட்டது.

எனினும் இது உண்மையிலேயே இருந்ததா என்பது பற்றிய சந்தேகமும் இன்னும் உள்ளது.




ஒலிம்பியாவின் ஸேயுஸ் சிலை(Statue of Zeus at Olympia)

இன்றைய கிரீஸில், கி.மு ஐந்தாம் நூற்றாண்டில், கிரேக்கச் சிற்பி, பீடியாஸ் என்பவரால் செதுக்கப்பட்டது.

கிபி 394 இல், இது கொன்ஸ்தந்தினோப்பிள் (தற்கால இஸ்தான்புல்) நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கக்கூடும் என்றும், அங்கு தீக்கு இரையானதாகவும் சொல்லப்படுகிறது.



ஆர்ட்டெமிஸ் கோயில்(Temple of Artemis) 

ஆர்ட்டெமிஸ் என்னும் கடவுளுக்காகக் கட்டப்பட்ட ஒரு கிரேக்கக் கோயில் ஆகும்.

டயானாவின் கோயில் என்றும் அழைக்கப்படுகின்ற இது, கி.பி 550 அளவில் இப்போதைய துருக்கியிலுள்ள எஃபேசஸ் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.

இது பாரசீகப் பேரரசின் ஆர்க்கியெமனிட் (Achaemenid) வம்ச காலத்தைச் சேர்ந்தது.



மௌசோல்லொஸின் கல்லறை(Mausoleum at Halicarnassus)

மௌசோலியம் காரியாவின் பாரசீக சத்ரப்பினால், ஹலிகர்னாசஸ் என அழைக்கப்பட்ட, இன்றைய துருக்கியிலுள்ள போட்றம் என்னுமிடத்தில் கட்டப்பட்டது.

இந்தக் கட்டிடம் பழம் கிரேக்கத்தின் புகழ்பெற்ற கட்டிட வடிவமைப்பாளர்கள் சத்யோஸ் மற்றும் பைதிஸ் வடிவமைத்ததாகக் கூறப்படுகிறது.

அது ஏறத்தாழ 45 மீட்டர் (135 அடி) உயரம் கொண்டு நான்கு பக்க சுவர்களில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கிரேக்க சிற்பியின் கலைப்படைப்புகளை தாங்கி யிருந்தது.





ரோடொஸின் கொலோசஸ்(Colossus of Rhodes)

ஹெலியோசின் பிரம்மாண்டமான சிலை. தற்கால கிரீசில், கி.மு 280ல் உருவாக்கப்பட்டது.

அலெக்ஸாந்திரியாவின் கலங்கரை விளக்கம், இன்றைய எகிப்திலுள்ளது. கி.மு 3ஆம் நூற்றாண்டில், சொஸ்த்திராட்டஸ் என்பவரால் கட்டப்பட்டது.

கி. மு. 224 இல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிலையின் காற்பகுதியில் முறிவு ஏற்பட்டு விழுந்துவிட்டது.



0 comments:

Post a Comment