வெஸ்டர்ன் கொலேஜ் ஃபோர் மனேஜ்மன்ட் அன்ட் டெக்னொலஜி தனது முதலாவது வருடாந்த பட்டமளிப்பு வைபவத்தை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கொண்டாடியிருந்தது.
பிரித்தானியாவின் பொல்டன் பல்கலைக்கழகத்தின் பதில் உதவி பீடாதிபதியான வில்லியம் வெப்ஸ்டர் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார். விசேட அதிதியாக அசோசியேட்டட் மோட்டர்வேய்ஸ் தாபனத்தின் உற்பத்தி பிரிவின் பணிப்பாளர் புஷ்பிக ஜனதீர பங்கேற்றிருந்தார்.
இந்நிகழ்வில் கல்வி செயற்பாடுகளுக்கான பங்காண்மை முகாமையாளர் கிரிஸ்டின் கிரான்ட் மற்றும் பங்காண்மை உறவுகள் முகாமையாளர் ஃபசயி உத்தின் மற்றும் இலங்கையிலுள்ள சிரேஷ்ட கல்விமான்களும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில், மாணவர்களுக்கு MBA பட்டங்கள் பிரித்தானியாவின் பொல்டன் பல்கலைக்கழகத்திடமிருந்து வழங்கப்பட்டிருந்ததுடன், பிரித்தானியாவின் Pearson Edexcel இடமிருந்து உயர் தேசிய டிப்ளோமாக்களும் வழங்கப்பட்டிருந்தன.
மாணவர்களின் திறமையான சாதனைகளை பாராட்டியிருந்ததுடன், பிரித்தானியாவின் பொல்டன் பல்கலைக்கழகத்தின் பதில் உதவி பீடாதிபதியான வில்லியம் வெப்ஸ்டர் கருத்து தெரிவிக்கையில்,
“எமது பல்கலைக்கழகம் 190 வருடத்தை பூர்த்தி செய்கிறது. இந்த 190 ஆண்டுகளில், நாம் இரு பாலாருக்குமான கல்விச் சேவைகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தியிருந்தோம். எமது எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு நாம் மேலும் 25 மில்லியன் பவுண்களை முதலீடு செய்து நிர்மாண செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதன் மூலம், அத்தியாவசியமான சிறப்புக்கான புதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். எமது விஸ்தரிப்புகளுக்கமைய, விஞ்ஞானம் மற்றும் பொறியியல், சுகாதாரம் மற்றும் புத்தாகக் துறைசார்ந்த பாடங்கள் மற்றும் சட்ட கல்லூரி போன்றன உள்ளடங்கியுள்ளன. நாம் தற்போது புதிய நவீன வசதிகளை கொண்ட கட்டடங்களையும் வசதிகளையும் ஏற்படுத்தி வருகிறோம்.
மேலும், 40 மில்லியன் பவுண்கள் பெறுமதியான மாணவர் கிராமத்தை நிர்மாணிப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம், வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள், பிரித்தானியாவுக்கு தமது உயர்கல்வியை தொடர்வதற்காக வருகை தருகையில், தமது தங்குமிட வசதிகளை தேடிக் கொள்ளக்கூடியதாக இருக்கும். எனவே, எதிர்காலத்தில் எம்முடன் இணைந்து உங்கள் உயர் கல்வியை தொடர விரும்பினால், எமது மத்திய நகரமான பொல்டன் நகரில் தங்குமிட வசதிகளை நீங்கள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.
கல்வியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி எரங்க வீரமந்திரி கருத்து தெரிவிக்கையில்,
”நவீன கல்வி வாய்ப்பு முறைகள் தொடர்பில் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையிலமைந்த விடயங்களை குறிப்பிட்டிருந்ததுடன், தொழில் வாய்ப்புகள் பற்றிய விடயங்கள் குறித்தும் நாம் கவனம் செலுத்துகிறோம். மேலும், நாம் மாணவர்களை வணிக மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் தயார்ப்படுத்துகிறோம்.
இதன் மூலம் அவர்களுக்கு சர்வதேச சவால்களை எதிர் கொள்ளக்கூடியதாகவிருக்கும். குறிப்பாக உள்நாட்டு பெறுமதிகள், நம்பிக்கைகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றுக்கமைய அவர்களால் செயலாற்ற முடியும். உலகளரவிய ரீதியில் நாடுகள் பொருளாதார நெருக்கடிகள், அத்தியாவசிய வளங்கள் தீர்ந்து போகும் நிலை மற்றும் முடிவற்ற மோதல்கள் போன்றவற்றை எதிர்நோக்கியுள்ள சந்தர்ப்பத்தில் நீங்கள் உங்கள் உங்கள் பட்டத்தை பூர்த்தி செய்துள்ளீர்கள்.
வெஸ்டர்ன் கொலேஜில் நீங்கள் பெற்றுள்ள பயிற்சிகள் மூலமாக, இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளோம். தொடர்ச்சியாக பயில்வது, தடைகளை தாண்டுவதற்கான தயார்நிலை, ஆய்வுகள் மற்றும் சர்வதேச அறிவு போன்றன உங்களை தொழில் நிலையிலும், வாழ்க்கையிலும் மேல்நோக்கி கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் அமைந்திருக்கும். நாட்டின் சமூக பொருளாதார செயற்பாடுகளுக்கு உங்களால் பங்களிப்புகளை வழங்கக்கூடிய பொறுப்பும் காணப்படும்.
ஒன்றுகூடியிருந்தோர் மத்தியில் புஷ்பிக ஜனதீர கருத்து தெரிவிக்கையில்,
“புதிய பட்டதாரிகள் தொழில் பற்றிய சவால்களை எதிர் கொள்ளக்கூடிய வகையில் தயார்நிலையில் காணப்படுவார்கள். வெஸ்டர்ன் கல்லூரியில் கல்வி மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த வழிகாட்டல்களை பெற்றுக் கொண்டதன் மூலமாக அவர்களுக்கு சிறந்த தொழில் எதிர்காலங்களை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.
இந்நிகழ்வில், 20 MBA பட்டதாரிகளும், 11 உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களையும் வணிக துறையில் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருந்தன. Cohort 1மற்றும் Cohort 2 க்கான தங்க விருதுகள் உதவி பதில் பீடாதிபதி ஆர்.பி.டி. ஆயோத்ய செனவிரட்ன மற்றும் ரி.சுவிமலி ஒன்டாட்ஜி ஆகியோர் மூலமாக வழங்கப்பட்டன.
வணிக பிரிவில் BTEC Edexcel உயர் தேசிய டிப்ளோமா கற்கைகளில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்தவர்களுக்கான பட்டங்களை எச்.எல்.ஏ. கிரிஷ்மலி டி சில்வா மூலமாக வழங்கப்பட்டிருந்தது.
2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் பிரித்தானியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வெஸ்டர்ன் கொலேஜ் ஃபோர் மனேஜ்மன்ட் அன்ட் டெக்னொலஜி தாபிக்கப்பட்டிருந்தது. வெஸ்டர்ன் கொலேஜை சேர்ந்த மாணவர்களுக்கு வெவ்வேறு பட்டக்கீழ் படிப்பு மற்றும் பட்ட மேல் படிப்பு கற்கைகளை தொடர்வதற்கான வாய்ப்புகள் வணிகம், கணினியியல் மற்றும் பொறியியல் துறையில் பயில்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
முழு நேரம் மற்றும் பகுதி நேர அடிப்படையில் கற்கைகள் வழங்கப்படுகின்றன. பொல்டன் பல்கலைக்கழக பட்டத்துக்காக பயிலும் மாணவர்களுக்கு தமது முழு கற்கைநெறியையும் இலங்கையில் அல்லது பிரித்தானியாவில் அல்லது ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பயில்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.
வெஸ்டர்ன் கொலேஜ் என்பது இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியை பெற்ற கல்வியகமாகும், Kartha Education Society (KES) இன் அங்கத்துவ அமைப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. இது சர்வதேச கல்விச் சேவைகளை வழங்கும் குழுமம் என்பதுடன், இந்தியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் சர்வதேச கல்விச் சேவைகளை வழங்கும் அனுபவத்தை கொண்டுள்ளது.
வெஸ்டர்ன் கொலேஜ் நவீன வகுப்பறை வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இதில், இணையத்தளம், டேடா புரெஜெக்டர்கள் போன்றன உள்ளடங்கியுள்ளதுடன், சகல வசதிகளையும் கொண்ட கணினி கூடம் இணைய வசதிகள்,Wi-Fi hotspots மற்றும் நூலகம் போன்றன காணப்படுகின்றன.
இந்த வசதிகள் மூலமாக, மாணவர்களை ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு ஊக்குவிக்கப்படுவதுடன், புதிய அறிவை பெற்றுக் கொள்ளவும் உதவியாக அமைந்துள்ளது, அத்துடன் அவர்களுக்கு குழுநிலை செயற்பாடுகள், பிரச்சனைகளை தீர்த்தல், ஆராய்தல் மற்றும் வெளிப்படுத்தல் ஆளுமைகள் போன்றன மேம்படுத்தப்படுகின்றன.
0 comments:
Post a Comment