மைக்ரோசொப்டின் விண்டோஸ்-10 பதிப்பு நேற்று புதன்கிழமை வெளியானது. இது கணனி உலகின் புதிய யுகம் என்று மைக்ரோசொப்ட் நிறுவன நிறை வேற்று அதிகாரி வர்ணித்துள்ளார்.
சர்வதேச அளவில் நேற்று வெளியான விண் டோஸ்-10 பல்வேறு அதிவேக, நவீன அம்சங்களை கொண்டிருப்பதோடு ஏற்கனவே விண்டோஸ்-7, 8 வைத்திருப்பவர்கள் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, விண்டோஸ் நிறுவனத்தின் அதிகார பு+ர்வ அனுமதியுடன் விண்டோஸ்-7, விண்டோஸ்-8, விண்டோஸ்-8.1 கணனிகள் மற்றும் விண்டோஸ் 8.1 ஸ்மார்ட் போன்களை வைத்திருப்பவர்கள் விண் டோஸ்-10 பதிப்பில் உள்ள அனைத்து நவீன தொழி ல்நுட்ப வசதிகளையும் இலவசமாக தரம் உயர்த்திக் கொள்ளலாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறி வித்துள்ளது.
விண்டோஸ்-7 பதிப்புக்கு பின்னர் வெளியான விண் டோஸ்-8 பெரிய அளவில் மக்களிடையே வரவே ற்பை பெறவில்லை. இதையடுத்து, விண்டோஸ்-9 வெளியாகவில்லை.
சுமார் மூன்றாண்டுகள் இடை வெளிக்கு பின்னர் வெளியாகி இருக்கும் விண்டோஸ்-10 பதிப்பில் பல் வேறு வகையான நவீன அம்சங்கள் இணைக் கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித் தது.
இப்புதிய இயங்கு தளம் கணனிகள் மட்டுமின்றி, டேப்லெட், ஸ்மார்ட் போன்கள் போன்றவற்றிலும் இய ங்கும் தன்மை கொண்டதாகும். மேலும், தற்போ துள்ள பதிப்புகளை விட வேகமாக இயங்குவதுடன், புதிய பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்டோஸ் 10 இயங்குதளத்தை இணையதளத்தி லிருந்து பதிவிறக்கி அப்டேட் செய்து ஒரு வருடம் வரை இலவசமாக பயன்படுத்தலாம் என்று மைக் ரோசொப்ட்
0 comments:
Post a Comment