அவுஸ்திரேலியாவின் மெல்போர்ண் நகரிலுள்ள Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் முதலாவது இலத்திரனியல் பஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தொடுதிரை தொழில்நுட்பத்தினூடாக இந்த பஸ்ஸினை கட்டுப்படுத்தக்கூடியதாக இருப்பதுடன், USB மூலம் சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் 50 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பஸ்ஸினால் சூழலுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏனைய டீசலில் இயங்கும் பஸ்களை பராமரிக்க ஏற்படும் செலவுகளை விட இந்த பஸ்ஸினை பராமரிப்பதற்கான செலவு 80 சதவீதத்தினால் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment