விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை படைத்துள்ள அமெரிக்காவை சேர்ந்த நாசா நிறுவனம், விண்வெளியில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்க முயற்சி மேற்கொள்கிறது.
அமெரிக்காவின் விண்வெளி நிறுவனமான நாசா விண்வெளியை மையமாக வைத்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்லாமல் விண்வெளியில் நாசாவுக்கு நிரந்தர ஆராய்ச்சி மையமே இருக்கிறது.
இந்நிலையில், நாசா தற்போது விண்வெளியில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான மிகப்பெரிய திட்டத்தில் இறங்கியுள்ளது.
இதற்கான சன் டவர், ஸ்பேல் ஆல்பா, ஸ்பேஸ் டக்போட்ஸ், சான்விட்ச் கான்செப்ட் என பல திட்டங்கள் ஆய்வு நிலையில் உள்ளன.
இதற்காக சுமார் ரூ.75 ஆயிரம் கோடி நிதியை ஒதுக்கியுள்ள நாசா, இந்த திட்டத்திற்காக ரூ. 1.26 லட்சம் கோடி வரை செலவாகும் என மதிப்பிட்டுள்ளது.
இந்த திட்டங்களில் ஒன்றான சன் டவர் திட்டத்தின் மூலம், சோலார் தகடுகளை தரையிலிருந்து வானில் அமைத்துச் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், ஸ்பேஸ் ஆல்பா திட்டத்தின் மூலம், சோலார் தகடுகளை அமைத்து சாட்டிலைட் போல வானில் பறக்க விட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டங்களின் மூலம் சேமிக்கப்படும் மின்சாரம் மின் அலைகளாக மாற்றப்பட்டு, பூமியின் தரைப் பகுதி சேமிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளது.
மேலும், இந்த அசாத்தியமான புதிய திட்டங்களின் மூலம் பூமியில் 24 மணி நேரமும் 365 நாட்களும் மின் உற்பத்தி செய்ய முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment