10:00
0

கணித பாடத்தில் அசத்தும் புனித் சந்திரமவுலீசனுக்கு வெறும் 10 வயதே ஆகின்றது. ஆனால் அவர் GCSE தேர்வில் A* பெற்று சாதனை படைத்துள்ளார்.
Longwood தனியார் பள்ளியில் பயின்று வந்த புனித், குடும்பத்தில் போதிய வருவாய் இல்லாத காரணத்தால் அங்கிருந்து மாற்றலாகி Bournehall தொடக்கப் பள்ளியில் பயின்று வருகிறார்.

கணிதத்தில் தமக்கு அதிக ஈடுபாடு இருப்பதாக கூறும் புனித், தமது திறமைக்கேற்ற சவால்கள் இருப்பது GCSE தேர்வில் தான் என்றார்.

கணித வகுப்பில் இனி தாம் மற்ற மாணவர்களுக்கு உதவ இருப்பதாகவும், அதனால் கிட்டும் இன்பமே தனி எனவும் கூறும் புனித், தமக்கு பிடித்தமான பாடம் கணிதமல்ல என்றார்.

ஓரிகாமியில் அதிக ஈடுபாடு இருப்பதாக கூறும் புனித், அறிவியலும் பிடித்த பாடத்தில் ஒன்று என்றார்.

குட்டிக் கணித மேதையாக வலம் வரும் புனித் குறித்து அவரது தந்தை பெருமையுடன் நினைவு கூர்கின்றார்.

GCSE தேர்வில் புனித் கலந்து கொள்ள வேண்டும் என்று அவரது ஆசிரியர்கள் தம்மிடம் கூறிய போது தாம் அதை கருத்தில் கொள்ளவில்லை என்றார்.

ஆனால் புனித் மிகவும் திறமையாக அந்த தேர்வை சந்தித்து A* பெற்று சாதனை படைத்துள்ளார் என்றார்.

0 comments:

Post a Comment