06:37
0

பாடசாலைகளில் கணினிப் பயன்பாடு அதிகரிப்பதால் மாணவர்களின் கல்வித் திறன் அதிகரிக்கப்படவில்லை என சர்வதேச ஆய்வு ஒன்று கூறுகின்றது.

நவீன தொழில்நுட்பங்களால் மாணவர்களின் கற்கைத் திறன் மேம்படும் என்ற ஒரு போலியான நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகின்றது என  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பின் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் அடிக்கடி கணினி தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை அவர்களின் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் பெற வழிவகுக்கும் என ஆய்வு முடிவுகள் காட்டுவதாக அவ்வமைப்பு கூறுகிறது.

கற்றல் நடவடிக்கையில் வீட்டுப்பாடத்திலோ வகுப்பறையிலோ டிஜிட்டல் கருவிகளின் பயன்பாட்டை ஒப்பீட்டளவில் குறைவாகப் பயன்படுத்தும் ஆசிய கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் சர்வதேச அளவில் மிகச் சிறப்பான மதிப்பெண்களைப் பெறுகிறார்கள் என இந்த ஆய்வு முடிவு சுட்டி காட்டியுள்ளது.

0 comments:

Post a Comment