17:58
0

பாடசாலை மாணவருக்கு 2016ம் ஆண்டு முதல் பாடசாலை சீருடைக்காக பண வவுச்சர்கள்.
அரச மற்றும் அரச உதவி பெறும் 10,000 பாடசாலைகில் கல்வி பயிலும் 4.2 மில்லியன் மாணவ மாணவிகளுக்கு பாடசாலை சீருடைக்காக இலவச துணியை 1993 ம் ஆண்டு முதல் கல்வி அமைச்சு தொடர்ந்து வழங்கி வருகின்றது. இதற்காக ஆண்டுக்கு ரூபா 2,300 மில்லியன் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

தேசிய போட்டி கேள்விப் பத்திர முறை மூலம் இந்த வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றன. முழு சீருடைத் துணித் தேவையை உண்ணாட்டு துணி உற்பத்தி மூலம் வழங்குவது தக்கது என்று அமைச்சரவைத் தீர்மானம் மூலம் உறுதி செய்யப்பட்டதனைத் தொடர்ந்து 2015 ம் ஆண்டு சீருடைத் துணித் தேவையானது உண்ணாட்டு துணி உற்பத்தி மூலம் ஈடு செய்யப்பட்டது. இதன்போது வழங்கப்படும் துணிகளின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்தன. உண்நாட்டு துணி உற்பத்தியாளர்கள் மற்றும் துணி நிறுவனங்களின் ஏகாதிபதித் தனத்துக்கு அரசு அவ்வப்போது முகம் கொடுக்க நேரிட்டு வந்தது.


அவ்வாறே இந்த ஆக்க வேலைகளுக்கு உரிய குழுக்கள் மற்றும் பணிக் குழுக்களை நேர காலத்தோடு ஈடுபடுத்துதல், துணி வழங்கல், களஞ்சியப்படுத்தல், பராமரித்தல், இணைப்பு ஒழுங்குகளைச் செய்தல், கொண்டுபோதல் முதலான விடயங்களுக்காக பெருஞ் செலவு செய்தல் முதலான நடைமுறையில் சவாலான செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியேற்படுகின்றன. இது தொடர்பாக விமரிசன ரீதியான அறிதலை மேற்கொண்டு, கல்வி அமைச்சு பாடசாலை மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் சீருடைத் துணிக்குப் பதிலாக பண வவுச்சர்களை வழங்குவது பொருத்தமானது என்று முடிவு செய்திருக்கிறது.

அதற்கு அமைய பொருத்தமான செயல்முறை ஒன்றைத் தயாரிப்பதற்காக ஒரு குழுவை அமைத்து உரிய விடயங்களை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கல்விச் செயலாளருக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

0 comments:

Post a Comment