17:39
0

எதிர் காலத்தில் பாடசாலைக் கல்வியில் பல முக்கிய மாற்றங்கள் – சாதாரண தரத்தில் சித்தி பெற முடியாது பாடசாலையை விட்டு வெளியேறும் மாணவருக்கு மீண்டும் உயர் கல்வி வரம், 1-ம் தரம் தொடக்கம் 13-ம் தரம் வரை ஒவ்வொரு மாணவருக்கும் தொடர் கல்வி
பிரதமர் தலைமையிலான குழுவினால் எடுக்கப்பட்ட கொள்கைத் தீர்மானத்துக்கு அமைய எதிர் காலத்தில் பாடசாலைக் கல்வியல் தீர்க்கமான மாற்றங்கள் பல மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம் கூறினார்.
அத்துடன், க. பொ. த. (சா.த.) பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களில் 90,000 பேர் வரை உயர் கல்வி வரம் கிடைக்காது போய்விடுகின்றார்கள். அத்தகைய நிலை இடம் பெறாது இருப்பதற்காக அவ்வாறு பாடசாலையில் இருந்து வெளியேறும் மாணவர்களுக்கு பொருத்தமான தமக்கு விருப்பமான பாடப் பரிந்துரையில் உயர் தரக கல்வியை மேற்கொள்ள வாய்ப்பை வழங்குவதற்காக எதிர் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.

2015 பன்னாட்டு கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றி வெற்றி பெற்ற  மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  Olympiad awards Apegama2
2015 – 12 – 15-ம் திகதி காலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் கலைப்புலத்தில் (ஜனகலா கேந்திரய)) இடம் பெற்ற இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியாவும் கல்வி அமைச்சரின் செயற்பாடுகளைப் பாராதட்டினார்.

இளம் அமைச்சராக, புரட்சிகரமான, செயல் வீரமிக்க மற்றும் நேர்மையான பல தீர்மானங்களை எடுக்கும் கல்வி அமைச்சர் கௌரவ அகில விராஜ் காரியவசம், தற்போது கல்விப் புலத்தின் வேறுபாடுகள் பலவற்றைச் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்று சபாநாயகர் இங்கு மேலும் குறிப்பிட்டார்.



0 comments:

Post a Comment