உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்சின் ஈபிள் கோபுரம் டுவிட்டரில் இணைந்துள்ளது.
பிரான்சில் 126 ஆண்டுகளுக்கு முன்பு கஸ்டவ் ஈபிள் என்ற கட்டிடக்கலை வல்லுனரால் உருவாக்கப்பட்டது ஈபிள் கோபுரம்.
உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள், தற்போது டுவிட்டரில் இணைந்து புதிய பக்கமொன்றை தொடங்கியுள்ளது.
ஈபிள் கோபுரம் தொடர்பான செய்திகள் மற்றும் வரலாற்று உண்மைகளை தெரிவிப்பதற்காக டுவிட்டரில் கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதில், கடந்த 1889-ம் ஆண்டில் பிறந்த பிரான்சின் பாரீஸ் நகர வாசியான நான் இப்போது டுவிட்டரில் இணைந்து இருக்கிறேன் என லா கிரான்ட் டேம் என்ற புனைப் பெயரால் அழைக்கப்படும் ஈபிள் கோபுரத்தின் முதல் பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, இந்தியாவின் தாஜ்மஹால் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment