08:10
0

ஆஸ்திரியா நாட்டில் 800 வருடங்களுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்ட கைப்பேசி போன்ற ஒருபொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அதனை வேற்றுக்கிரகவாசிகள் பயன்படுத்தியுள்ளனரா என சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஆஸ்திரியாவில் தொல்பொருள் துறையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சில தினங்களுக்கு முன்னர் பூமியிலிருந்து மர்மமான பொருள் ஒன்றை தோண்டி எடுத்துள்ளனர்.

தற்போதைய நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் கைப்பேசியை போல் அது காணப்படுவதால் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

களிமண் மாதிரி காணப்படுவதுடன் அதன் மீது ஒரு கைப்பேசியில் என்னென்ன குறியீடுகள் இருக்குமோ அவை அனைத்தும் பழங்கால மொழி வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

13 நூற்றாண்டை சேர்ந்த பொருளாக கருதப்படும் இவற்றின் மீது உள்ள எழுத்துக்கள்/குறியீடுகள் தற்போது ஈரான் அல்லது இராக் நாட்டிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது.

இந்த கண்டுபிடிப்பு குறித்து ஆய்வு செய்துவரும் ஆராய்ச்சியாளர்களில் சிலர், ‘வேற்றுக்கிரகவாசிகள் இதனை பயன்படுத்தி இருக்கலாம் என்றும், பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு எதிர்காலத்தில் கைப்பேசி எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து அவர்கள் இதனை வடிவமைப்பு செய்தி இருக்கலாம் என கருதுகின்றனர்.

இவர்களில் சில ஆராய்ச்சியாளர்கள் ‘இந்த மர்மமான பொருள் கண்டுபிடித்துள்ளதன் மூலம் காலப்பயணம்(Time Travel) ஒருவகையில் சாத்தியமாக இருந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளனர்.

எனினும், 800 வருடங்களுக்கு முன்னர் இருந்துள்ளதாக கருதப்படும் இந்த மர்ம கண்டுபிடிப்பு தொடர்பான விரிவான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் கிடைக்கப்பெறாததால் இது குறித்து தொல்பொருள் துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.






0 comments:

Post a Comment