இயற்கைக்கு எதிரான மனித நடவடிக்கைகளால் பல்வேறு காலநிலை அபாயங்கள் உலகெங்கும் ஏற்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
எனினும் இவ்வாறான பாதிப்புக்குள் அதிகளவில் சிக்கியுள்ள நாடுகள் மற்றும் பகுதி அளவில் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நாடுகள் போன்றவற்றினை எடுத்துக்காட்டக்கூடிய உலக வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2000ம் ஆண்டு தொடக்கம் 2013ம் ஆண்டு வரையான காலப் பகுதியில் செயற்கைக்கோள் மூலம் பதிவு செய்யப்பட்ட படங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள பகுதிகள் கால நிலை மாற்றங்களால் கடுமையாகப் பாதிக்கப்படலாம் என்பதையும், மஞ்சள் நிறத்தினால் காட்டப்பட்டுள்ள பகுதிகள் ஓரளவு பாதிப்பை எதிர்நோக்கலாம் என்பதனையும், பச்சை நிறத்தினால் காட்டப்பட்ட பகுதிகள் பாதுகாப்பானவை என்பதனையும் சுட்டிக்காட்டுகின்றன.
0 comments:
Post a Comment