17:59
0

இன்றைய தொழில்நுட்ப உலகில் மக்களுக்கு பல்வேறு பயனுள்ள சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் கல்வி தொடர்பான அப்பிளிக்கேஷன்களையும் அறிமுகம் செய்து வந்தமை தெரிந்ததே.
2013ம் ஆண்டு Google Play for Education எனும் சேவையை அறிமுகம் செய்ததன் ஊடாகவே இவ்வாறான அப்பிளிக்கேஷன்களை உருவாக்கி வழங்கிவந்ததுடன் அதனை ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என்பன தரவிறக்கம் செய்து பயன்படுத்தி பயன்பெறக்கூடியவாறு இருந்தது.

எனினும் காரணம் வெளியிடப்படாத நிலையில் இச் சேவையினை எதிர்வரும் மார்ச் 14ம் திகதிக்கு பின்னர் நிறுத்துவதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் கல்வி தொடர்பான கூகுளின் ஏனைய சேவைகளை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment