05:48
0

சம காலத்தில் கணினியின் பாவனை அதிகரித்துள்ளதுடன், அவற்றில் சேமிக்கப்படும் கோப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

இதனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் வன்றட்டின் (Hard Disk) சேமிப்பு கொள்ளளவினை அதிகரித்து அறிமுகம் செய்கின்றன.

இவற்றின் வரிசையில் தற்போது சம்சுங் நிறுவனம் 16 ரெறாபைட் (TB) சேமிப்பு வசதி கொண்ட உலகின் முதலாவது வன்றட்டினை அறிமுகம் செய்துள்ளது.

இவ் வன்றட்டில் 3 மில்லியன் MP3 பாடல்கள், 4,000 திரைப்படங்கள், 5 மில்லியன் வரையான நிழற்படங்கள் போன்றவற்றினை சேமிக்க முடியும்.

மேலும் 2.5 அங்குல அளவுடைய இவ் வன்றட்டினை இடத்திற்கு இடம் இலகுவாக எடுத்துச் செல்லக்கூடியதாக இருத்தலும், செக்கனுக்கு 10GB வேகத்தில் தரவுப் பரிமாற்றம் செய்யக்கூடியதாக இருத்தலும் சிறப்பம்சங்களாகும்.



0 comments:

Post a Comment