மொபைல் சாதனங்களில் இருந்து வெளிவிடப்படும் கதிர்களினால் இதயம் மற்றும் விந்தணு பாதிப்புக்கள் ஏற்படுவதாக பல ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை தெரிந்ததே.
இப் பிரச்சினைக்கு இதயத்திற்கு முன்னால் உள்ள சட்டைப் பை மற்றும் காற்சட்டையின் இரு புறங்களிலும் உள்ள பைகள் என்பவற்றில் மொபைல் சாதனங்களை வைத்திருக்க வேண்டாம் என்பதே தீர்வாக சொல்லப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கதிர்ப்புக்களை தடுக்கக்கூடிய உள்ளாடை ஒன்றினை ஜேர்மனியை சேர்ந்த Munich Business பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் கண்டுபித்துள்ளனர்.
இந்த ஆடையானது கதிர்களை தெறிப்படைய செய்யும் வெள்ளி வயர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் விந்தணுக்கள் மொபைல் சாதனங்களின் கதிர்ப்பினால் பொரிந்து செயலற்றுப் போதல் தவிர்க்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment