நாசாவின் கெப்ளர் வெளி தொலைநோக்கு நடவடிக்கையின் போது 1,284 புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 9 கிரகங்களில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் இருக்கலாம் எனவும் தெரியவருகிறது.
ஒரே தடவையில் பெருந்தொகை கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவை.
இக் கண்டுபிடிப்பானது புதுவகை தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்டது.
முன்னைய காலங்களில் தரை வழி தொலைகாட்டிகளை பயன்படுத்தியே வேற்றுக்கிரகங்கள் ஒவ்வொன்றாக அறியப்பட்டன.
இம் முறையானது காலதாமதமான முறை மட்டுமல்லாது, செலவு கூடியதாக இருந்தது.
இதனால் கிட்டத்தட்ட 984 வேற்றுக்கிரகங்களே கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
ஆனால் புதிய முறை மூலம் 1,935 உறுதிப்படுத்தப்பட்ட கிரகங்களும், மொத்தமாக 1,248 கிரகங்களும் இருப்பது தெரியவருகிறது.
0 comments:
Post a Comment