05:38
0

உலகளவில், பிரெஞ்சு மொழி தான் 2வது பிரபலமான மொழியாக உள்ளதாகவும், பெரும்பாலான மக்கள் அதனை கற்றுக் கொள்ள முயல்வதாகவும் தெரியவந்துள்ளது.

Duolingo என்ற மொழி பயன்பாட்டு செயலியை சுமார் 120 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலி மூலம் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக அனைவரும் பிரெஞ்சு மொழியை கற்கவே முயற்சி செய்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் உலகளவில், பிரெஞ்சு மொழி தான் 2வது பிரபலமான மொழியாக உள்ளதாக Duolingo செயலி மூலம் கருதப்படுகிறது.

194 நாடுகளிலும் உள்ளவர்கள் Duolingo செயலியை பெரும்பாலும் பயன்படுத்துவதால், கடந்த 3 மாதங்களில் பயனர்களின் புள்ளி விவரங்களை கொண்டு ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளனர்.

அந்த ஆய்வின் மூலமே, பயனர்கள் பெருமளவில் ஆங்கிலத்தை கற்க முயல்வதாகவும், அதற்கடுத்து பிரெஞ்சு மொழியைக் கற்க முயல்வதாகவும் தெரியவந்துள்ளது.

இதில் ஆங்கிலத்தை 116 நாடுகளில் உள்ள மக்கள் கற்க முயல்கின்றனர் என தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஆங்கிலம் முதலிடம் பிடித்துள்ளது.

பிரெஞ்சு மொழியை அவுஸ்திரேலியா, கனடா, கிழக்கு மற்றும் தெற்கு ஆப்ரிக்க பகுதிகள் என மொத்தம் 35 நாடுகளில் உள்ள பயனர்கள் கற்றுக்கொள்ள முயல்கின்றனர் என தெரியவந்துள்ளது.

பிரித்தானியர்கள் பிரெஞ்சு மொழியை விட ஸ்பானிஷ் மொழிக்கு முன்னுரிமை அளிப்பதும் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்கர்களும் ஸ்பானிஷ் மொழிக்கு முன்னுரிமை அளித்துள்ளனர், ஆங்கிலத்துக்கு 3ம் இடம் அளித்துள்ளனர்.

பிரெஞ்சு மொழியை 2ம் மொழியாக தெரிவு செய்த நாடுகள் பட்டியலில் 77 நாடுகள் இடம்பெற்றுள்ளன. அதாவது, அந்த செயலியை ஆங்கிலம் கற்க பயன்படுத்தும் பலரும் 2வது மொழியாக பிரெஞ்சு மொழியையே தெரிவு செய்துள்ளனர்.

உலகளவில் உள்ள மொத்த Duolingo செயலி பயனர்களில் 11 சதவிகிதம் பேர் பிரெஞ்சு மொழியினை கற்க தெரிவு செய்துள்ளனர்.

அதே நேரத்தில், பிரெஞ்சு மக்கள் ஆங்கிலத்துக்கு முதலிடமும், ஸ்பானிஷ் மொழிக்கு 2ம் இடமும் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment