அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் உலகில் இதுவரை வாழ்ந்த உயிரினங்களில், பெரியதும், மூர்க்கமானதுமான விலங்குகளின் படிமங்களை கண்டெடுத்துள்ளனர்.
அண்டார்டிகா பகுதியில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அணியினர் பல்வேறு தடைகளையும், இடையூறுகளையும் தாண்டி சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய படிமங்களை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த அணியில் உள்ள 12 விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீவ் சாலிஸ்பரி இது பற்றி கூறுகையில், நாங்கள் கண்டறிந்துள்ள பாறை படிமங்கள் டைனோசர்கள் வாழ்ந்த காலக்கட்டத்தை சேர்ந்தவை.
எனவே அவை 71 மில்லியன் ஆண்டுகள் முதல் 67 மில்லியன் ஆண்டுகள் பழமையானவையாக இருக்க வாய்ப்புள்ளது.
இவை எல்லாம் ஆழமற்ற கடல் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. எனவே, அந்த உயிரினங்களில் பெரும்பாலானவை கடல்வாழ் உயிரினங்களாகும்.
அவற்றில் மிகப்பெரிய கடல் பல்லி ஒன்றின் படிமமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.அந்த படிமங்கள் தற்போது சிலியில் உள்ளன.
அவை விரைவில் பிட்ஸ்பர்க்-ல் உள்ள கார்னகி அருங்காட்சியகத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment