வானியாளர்களால் நட்சத்திர தெககுதிகளுக்கப்பால் இரு கருந்துளைகளிலிருந்து ஒளியின் வேகத்திலும் கால் மடங்கு வேகத்துடன் வாயுக்கள் வெளிவருவது அவதானிக்கப்பட்டது.
இக் கருந்துளைகளானது அரியவகையான துணை நட்சத்திர தொகுதிகாளல் உருவாக்கப்படுவதாகவும், அவை வழைமையை விட மிக வேகமாக வாயுக்களை உறிஞ்சுவதாகவும் வானியளாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு குறித்த பொருளிலிருந்து வெளியேறும் வாயுவை அளவிடுவதும், இதுபோன்ற கருந்துளைகள் பற்றிய விளக்கங்களும் வெளிவருவது இதுவே முதல் தடவை.
பெரும்பாலான x-கதிர்வு மூலங்கள் விஞ்ஞானிகளால் அறியப்பட்டவைதான், ஆனாலும் இவ்வகைப் பொருட்கள் விரைவாக வாயுக்களை தன்னகப்படுத்துவதாகவும், முன்னெப்போதும் இது போன்ற வேகத்தில் வாயுக்கள் வெளியேறியதில்லையெனவும் லண்டனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
பின் ரோவும் அவரது சக ஆய்வாளர்களும் பால்வெளியிலிருந்து 22 மில்லியன் ஒளியாண்டு தொலைவினில் மேற்கொண்ட ஆய்விலிருந்து பல பயனுள்ள தகவல்கள் வெளிக்கொணரப்பட்டன.
வெளியேறும் வாயுக்களிலிருந்து வரும் x-கதிர்புகள் மூலம் அதன் வேகத்தை துணியமுடிகிறது. இவ்வாறான வாயுக்கள் மூலத் திணிவினால் கவரப்பட்டு பின்னர் கதிர்ப்புகளாக வெளிவருகின்றன.
மேலும் இவ்வாறான தொகுதிகளின் மூலத்திணிவு யாதாக இருக்கலாம் என்ற ஆராய்ச்சிகளிலும் வானியளாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment