உங்கள் கணித அறிவு நீங்கள் எந்தக் கை எழுத்தாளர் என்பதிலே தங்கியுள்ளது.
ஆம், அண்மையில் மேற்கொண்ட ஆராய்ச்சியொன்று இடக்கை எழுத்தாளர்கள், வலக்கை எழுத்தாளர்களைவிட கணக்கில் அதிக ஆற்றல் உடையவர்கள் என தெரிவிக்கின்றது.
இது போன்ற ஆராய்ச்சி கடந்த பல தசாப்தங்களாகவே இடம்பெறுகிறது.
இங்கு முன்வைக்கப்பட்ட கருதுகோளானது இடக்கை வாசிகளின் மூளையின் செயற்பாட்டு பிரதேசம் வலக்கை வாசிகளிலும் வேறுபட்டதெனவும், அப்பிரதேசம் கணித செயற்பாட்டில் அவர்களுக்கு பெரிய நன்மையை அளிக்கிறது என்பதாகும்.
இதில் சில ஆராய்வுகள் இடக்கை வாசிகள் கணிதத்தில் தேர்ந்து விளங்குவதாகவும், இன்னும் சில ஆய்வுகள் இருதரப்பினருக்குமிடையில் எந்த மாற்றம் இல்லையெனவும் கலந்துபட்ட முடிவுகளை தந்திருந்தது.
ஆனால் அண்மையில் லண்டனை சேர்ந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளிலிருந்து இடக்கை எழுத்தாளர்கள் அதிக கணித திறன் கொண்டவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்காக 6 தொடக்கம் 17 வயதுடைய, 2300 இத்தாலிய மாணவர்கள் மீது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
0 comments:
Post a Comment