நீண்ட காலமாகவே கேள்வியாக இருந்த ஒன்று, ஐன்ஸ்டீன்போன்ற கணிதவியளாளர்களின் மூளைத்திறனுக்கு அவர்களின் கடின உழைப்புத் தான்காரணமா? இல்லை பாரம்பரியமாகவே அவர்களது மூளை சராசரிமனிதர்களிலும் வேறுபட்டதா?
இகற்காக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், சிக்கலான கணித தீர்வுகளுக்காக
பயன்படுத்தப்படும் மூளையின் பகுதியும், சாதாரணமாக பயன்படுத்தப்படும் மூளையின் பகுதியும் ஒன்றுதானா இல்லை வெவ்வேறானவையா என இரு குழுக்களிடம் ஆராயப்பட்டது.
இதன்படிஇரு தேவைக்காகவும் மூளையின் வெவ்வேறு பாகங்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
அத்துடன் சாதாரண மனிதனும் கூட அப்பகுதியை கொண்டிருப்பதாகவும்கூறுகின்றனர்.
இவ் ஆராய்ச்சி பாரீஸ் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதற்காக15 கணிதவியலாளர்களும், 15 உயர் மட்ட கணிதவியலல்லாத கல்வியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள்MRI ஸ்கானுக்கு உட்படுத்தப்பட்டு கணிக வினாக்கள், மற்றும்சொற்கள் தொடர்பான வினாக்களுக்கு பதிலளிக்க பணிக்கப்பட்டிருந்தனர்.
சொற்கள் தொடர்பான கேள்விகள் வினவப்பட்டபோது மொழி தொடர்பான மூளையின் பகுதியில் அசைவுகள் காணப்பட்டதையும், சிக்கல் வாய்ந்த கணிதவினாக்களின் போது கணிதவியளாளர்களின் முற்பகுதி, கீழ்ப்பகுதி மூளைகளில் அசைவுகள் காணப்பட்டதையும் உணர முடிந்தது.
இதன்படி பயிற்சி மற்றும் கடின உழைப்பேமூளையின் திறனுக்கு காரணம் என அவர்கள் ஆய்வு கூறுகின்றது.
0 comments:
Post a Comment