பெல்ஜியம் நாட்டில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் அங்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களை வரவேற்கும் பணியில் மனித வடிவிலான ரோபோக்கள் ஈடுபட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஓஸ்டெண்ட் மற்றும் லீஜ் நகரில் உள்ள மருத்துவமனைகளில் வரவேற்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரோபோக்களை அறிமுகம் செய்துள்ளனர்.
மனித வடிவில் இருக்கும் ரோபோக்கள், நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களுக்கு சரியான துறைக்கு செல்ல வழிகாட்டியாக திகழ்கிறது.
14 செ.மீட்டர் உயரமுள்ள, சக்கர உதவியுடன் நகரும் தன்மையிலானது. மிகவும் அழகாகவும், அனைவரையும் கவரும் வகையிலும் உள்ளது.
சுமார் 20 மொழிகளை புரிந்து கொண்டு இந்த ரோபோக்கள் பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதே போல், 57 செ.மீட்டர் அளவிலான மற்றொரு ரோபோட்டையும் அதே நிறுவனம் உருவாக்கி உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 300 மருத்துவமனைகளில் உதவிக்காக ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment