08:35
0

ஸ்மார்ட் கைப்பேசி வரலாற்றில் முதன் முறையாக 6GB RAM பிரதான நினைவகத்தினைக் கொண்ட OnePlus 3 எனும் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதனால் கைப்பேசி பிரியர்கள் பலத்த எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இந்திய பெறுமதியில் 27,999 ரூபாய்கள் ஆகவும், அமெரிக்க பணப் பெறுமதியில் 416 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

இதேவேளை பிரதான நினைவகமாக 4GB RAM கொண்ட கைப்பேசியும் இதே பெயருடன் வெளியிடப்படவுள்ளது.

இருந்தும் இக் கைப்பேசியின் விலை இதுவரை தெரிவிக்கப்படவில்லை. இவ் இரு கைப்பேசிகளும் 5 அங்குல அளவுடைய தொடுதிரையினையும், Qualcomm Snapdragon 820 Quad-Core Processor, 32GB/64GB/128GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளன.

மேலும் இவற்றில் 16 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்பினை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் தரப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment