இந்தியா வம்சாவளியை சேர்ந்த 9 வயதான அன்விதா விஜய் என்னும் சிறுமி, அப்பிள் ஐபோனுக்கான பல செயலிகளை உருவாக்கி உலகளவில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளார்.
அவரின் திறமையை அங்கீகரிக்கும் வகையில், அமெரிக்கா நிறுவனமான அப்பிள், இந்த ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெறவுள்ள அந்நிறுவனத்தின் உலகளாவிய உருவாக்குனர்களின் மாநாட்டில் கலந்து கொள்ள அன்விதா விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதன் மூலம் இளம் வயதில் குறித்த மாநாட்டில் பங்குபெறும் முதல் நபர் என்ற பெருமையை அன்விதா விஜய் அடைந்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்த அன்விதா விஜய், செல்போன் செயலி உருவாக்குவதில் மிக ஆர்வமாக இருந்துள்ளார்.
எனினும் செயலி உருவாக்க போதிய அளவு பணம் இல்லாததால், கடந்த ஒரு ஆண்டு காலம் இணைதளம் மற்றும் யூடியூப்பில் மூலம் செயலி உருவாக்கும் வீடியோக்களை கண்டுபிடித்து, இளம் வயதில் ஐபோனுக்கான பல செயலிகளை உருவாக்கியுள்ளார்.
அவரது திறமையை உணர்ந்த அப்பிள் உலகளவில் சிறந்து விளங்கும் அந்நிறுவனத்தின் உருவாக்குனர்கள் பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்ள அன்விதா விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து அன்விதா விஜய் கூறுகையில், சிந்தனையை செயலியாக மாற்ற கடினமாக உழைக்க வேண்டும், செயலியை உருவாக்க பல செயல்முறைகள் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
அன்விதா விஜய் தற்போது, குழந்தைகள் அவர்களின் இலக்கை நிர்ணயம் செய்ய உதவும் செயலியை உருவாக்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment