பொதுவாக உறவினர்கள் உங்களை பார்த்து அப்பா மாதிரி, அம்மா மாதிரி என சொல்வதுண்டு.
ஆனால் உண்மை யாதெனில் நீங்கள் தாயிலிருந்து பெறும் பரம்பரையலகுகளை விட தந்தையிடமிருந்து பெறும் பரம்பரையலகுகளே அதிகம்.
இதுவே புவியில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொதுவான உண்மை.
ஆனால் இழைமணியானது(mitochondrial) ஒருவருக்கு தன் தாயிடமிருந்து மட்டுமே கடத்தப்படுகிறது.
இதற்கான காரணம் என்னவென்று விஞ்ஞானிகளால் பல தசாப்தங்களாகவே கண்டுபிடிக்க இயலாமல் போனது.
தற்போது Colorado Boulder பலடகலைக்கழக குழுவொன்று இதற்கான விளக்கத்தை அளித்துள்ளது.
இழைமணியில்லாது யாராலும் உயிர் வாழ இயலாது. ஏனெனில் கலத்திற்கு தேவையான சக்தியை இழைமணியே வழங்குகின்றது.
இவை தான் நாம் உட்கொள்ளும் உணவை கலத்தினால் பயன்படுத்தக்கூடிய சக்தியாக மாற்றுகின்றன.
இவ் இழைமணிகள் தமக்குரிய DNA யினை கொண்டிருப்பதோடு தாமாகவே இரட்டிப்படைகின்றன.
மேற்படி ஆய்வாளர் குழு Caenorhabditis Elegans எனும் புழு இனத்தில் கருக்கட்டலின் போது இவ் இழைமணிக்கு என்ன நடக்கிறது என்பதை ஆராய்ந்துள்ளனர்
கருக்கட்டலின் போது விந்து கலம் கொண்டிருக்கும் இழைமணியின் DNA ஆனது சதறடிக்கப்பட்டு அவ் இழைமணி பிரயோசனமில்லாது போகின்றது.
இச் செயற்பாடு autophagy எனப்படுகிறது. இது நடைபெறாதவிடத்து குறித்த முளையம் இறந்து போகின்றது.
இதுவே இழைமணி தாயிடமிருந்து மட்டுமே கிடைக்கப்பெறுவதற்கான காரணம் என அக்குழு விளக்கமளித்துள்ளது.
0 comments:
Post a Comment